முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b903

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஆயுத கலாசாரத்தை கற்றுக் கொடுத்தது யார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை என ஜே.வி.பி சுமத்தி வரும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… 1971ம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத கலாச்சாரத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்? ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனைச் செய்யவில்லை. இந்த ஆயுதக் கலாச்சாரத்தையே பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கற்றுக்கொண்டார். 1989ம் ஆண்டில் ஜே.வி.பி இந்த நாட்டுக்கு மீண்டும் பாரிய அழிவினை ஏற்படுத்தியது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவுகளைள ஏற்படுத்திய தரப்பே இந்த ஜே.வி.பியாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் இலங்கையில் பல்வேறு சேவைகள் மக்களுக்கு

TAMIL Eelam news b902

இலங்கை விவகாரத்தில் ஐ.நா நேரடி தலையீடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த தகவலை அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், அதனை வெளியிடுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரியதன் மூலம் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை அரசாங்கம் தமக்கு வழங்கவில்லை என கொழும்பு பேராயர் மல்கம்

TAMIL Eelam news b901

சிறிது சிறிதாகத் தமிழர்களிற்காகக் களம் இறங்கும் தேசியக் கூட்டமைப்பு பொறுத்துயிருந்து பார்ப்போம். கொழும்பில் நாளை மாபெரும் போராட்டம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் செயலகம் முன்பாக நாளை (24) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டால் பெரிதும் பாதிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அவலம் உட்பட ஏனைய மாவட்ட அவலங்களையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த எதிர்ப்பை மேற்கொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் மலையக கட்சிகளின் ஒத்துழைப்பும் நாடப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முற்பகல் 11 மணியில் இருந்து ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

TAMIL Eelam news b900

அதிகரிக்கும் போர்பதற்றம் -ரஷ்யா எடுத்துள்ள முடிவு போர் பதற்றத்தை அடுத்து உக்ரைனில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது. ரஷ்யா உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புடின் உத்தரவிட்டதால், அந்தப் பகுதிகளில் ரஷ்யா தனது படைகளை நிலைநிறுத்தியது.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், போர் அச்சுறுத்தலால் உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய தூதர்கள் பல அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் தெரிவித்து

TAMIL Eelam news b899

ஆரோக்கிய ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் ஆற்புத இலை! கண்டிப்பாக சாப்பிடவும்! இந்தியாவில் பெரும்பாலான வீட்டிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது ஐரோப்பாவில் இருந்து வந்த ஒரு தாவரம் என்பது சிலருக்குத் தெரியாது. இது சர்பத்தாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பெரும்பாலான மக்கள் புதினாவின் நன்மைகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். புதினா கீரை இந்த 5 நோய்களில் இருந்து நிவாரணம் தரும். புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் இருப்பதால் வலி தொடர்பான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புதினாவின் 5 முக்கிய நன்மைகளை பார்க்கலாம். சளி மற்றும் இருமல் நீங்கும் : தற்போது மாறிவரும் காலநிலையால் சளி, இருமல் வருவது சகஜம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதினாவை ஆவியில் எடுத்துக்கொள்வதன் மூலம் இத்தகைய நோய்கள் விரைவில் நீங்குகின்றன. வயிற்று வலி பிரச்சனை சரியாகும் : எக்குத்தப்பாக எதையும் சாப்பிடுவதால், பல பிரச்சனைகள் தொடங்குகிறது, அதன் பிறகு இது வயிற்றை வாட்டி வதைக்கிறது. அதன்படி சர்க்கரையுடன் புதினா சாறு சாப்பிட்டால், இந்த மிகப்பெரிய பிரச்சன

TAMIL Eelam news b898

ஜெனிவாவிற்கு செல்லும் இலங்கை குழுவுக்கு தலைமை தாங்கும் அமைச்சர்! ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் (G.L.Peiris) தலைமை தாங்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை 28-02-2022 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைப்பெறவுள்ளது. இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 49 ஆவது கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், (G.L.Peiris) நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) உட்பட விசேட பிரதிநிதிகள் குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளனர். இந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார். இவ்விஜயத்தின் போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் 49ஆவது அமர்வின் உயர்மட்ட பிரிவில் உரையாற்றுவார். அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான உரையாடலிலும் அவர் பங்குப்பற்றுவார். அத்துடன் வெளிவிவகாரத்துறை அம

TAMIL Eelam news b897

அம்பாறையின் தமிழர் பகுதியில் பிரித்தானியாவின் உலக அழகி ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேசஅழகி (MISS INTERNATIONAL UK -2020-2022) செல்வி இவஞ்சலின் லட்சுமணர் (Evangeline Lakshmanar) அம்பாறை - நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில்(தேசியபாடசாலை) நிறுவப்பட்ட 10அடி உயர சரஸ்வதி சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியைச்சேர்ந்த ஜக்கிய இராச்சியத்தின் இவ்வாண்டுக்கான சர்வதேச அழகி செல்வி இவஞ்சலின் லட்சுமணர் இதற்கென இலங்கை வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் சாந்திராஜகருணாவும் வருகைதந்தனர். இலங்கை சுற்றுலாஅதிகாரசபை அவர்களுக்கான விருந்தினர் அங்கீகாரத்தை வழங்கிய நிலையில், அவர்களுடன் அதன்பிரதிநிதிகளும் வந்திருந்தனர். பாடசாலை வளாகத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதித்தாயின் சிலை திறப்புவிழா வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சரஸ்வதித்தாயின் சிலையை உலகஅழகுராணி இவஞ்சலின் திறந்துவைக்க சிலைக்கான நினைவுபடிமக்கல்லை அவரது தாயார் சாந்திராஜகருணா திரைநீக்கம் செய்துவைத்தார். சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலை இணைப்பாளருமான வ