முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b129

 ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய முடியாது - வெளியாகியுள்ள தகவல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இது தொடர்பில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பொன்றை தயார் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டெல்லிக்கு விஜயம் செய்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இது பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து கொடுத்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல. இதில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது. எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது. பரோலில் வேண்டுமானால் சில காலம் அவர்கள் வெளியே இருக்கலாம் எ

TAMIL Eelam news b128

 ஆபாச பட விவகாரம்.. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது மிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ் குந்த்ரா ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர்.  இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் (Shilpa Shetty) கணவர் ராஜ் குந்த்ரா (Raj Kundra) ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களைத் (Pornographic films) தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்.   முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விஷயத்தில் ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

TAMIL Eelam news b127

 உயிரிழந்த மலையக சிறுமி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவு அறிக்கையை பொரளை பொலிஸில் உடனடியாக ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ரிஷாட் பதியுதினின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் பொரளை பொலிஸிற்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

TAMIL Eelam news b126

 இன அழிப்பு வியுகம் மாற்றப்பட்டுள்ளது முதல் துவக்கு இப்பொழுது வாள் இன அழிப்பு ஒரே  சமநிலையில் உள்ளது துரோகம் செய்த இந்தியாவிடம் செல்லுங்கள்! வெல்லுங்கள்!   இந்தியாவிடம் செல்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள்! அமெரிக்கா ஜனதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை கூறினார், “நீங்கள், எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லரையும் மடையர் ஆக்க முடியாது” என்று. அதே போல் நாமும், “எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம்” எனஅரசியல் ஆய்வாளர் ச.வி.கிருபாகரன் தனது கட்டுரையில்  தெரிவித்துள்ளார். குறித்த கட்டுரையில் மேலும், யதார்தம், உண்மை, நடைமுறை சாத்தியங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வையும் ஆலோசனையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன? சில வருடங்களுக்கு முன்னர் - வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயாகம்; இலங்கை தீவில் சிங்களம், தமிழ் என இரு தேசிய இனங்கள் இருப்பதாகவும் கூறி வந்த

TAMIL Eelam news b125

 கருணா தப்பிச் செல்ல யார் காரணம்? ரணில் தெரிவித்தது என்ன? காலம் கடந்து வெளிவரும் உண்மைகள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா தப்பிச் சென்றமைக்கு பொறுப்பேற்று என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது 7 வருடங்களுக்கு முன்னர் எனது கட்சித் தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார் எனக்கு துரோகமிழைத்தார் இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன். நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன். அந்த நாள் ஜூன் 22 2004 நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு துரோகமிழைத்

TAMIL Eelam news b124

 இனப்பிரச்சனை விவகாரத்தையும் உள்ளடக்கினாலே எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவோம் !     தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளிற்கான நிரந்தர தீர்வு திட்டத்தை முன்வைக்காத பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுவதில் அர்த்தமிருக்காது என்ற செய்தியை எதிர்க்கட்சிகளிற்கு அழுத்தம் திருத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளிற்கிடையிலான கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக இன்று கொழும்பு, ஜானகி ஹொட்டலில் சந்திப்பொன்று நடந்தது. கரு ஜயசூரியவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்தது. சஜித் பிரேமதாச, மாவை சேனாதிராசா, மனோ கணேசன், பழநி திகாம்பரம், ஐ.தே.க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வு, பொருளாதார பிரச்சனை, ஜனநாயக மறுப்பு உள்ளிட்ட 4 விடயங்களை அடிப்படையாக கொண்டு எதிரணிகள் ஓரணியாக செயற்பட வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மறைந்த சோபித தேரரின் ஏற்பாட்டிலான கூட்டணியை போல இது உருவாக்கப்பட வேண்டுமென கூறப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், மேற்குறிப்பிட்ட 4

TAMIL Eelam news b123

தென் நிலங்கையில் சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம் மேதகு பட விற்பனையால் இலங்கையில் அதிரடிக் கைதுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு தமிழ்த் திரைப்படத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நுவரெலியா பிரதேச புலனாய்வுப் பிரிவினரால் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடையொன்றை நடத்திவரும் நபரொருவரும் அவரது நண்பருமே கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, கார்கில்ஸ் கட்டட வளாகத்திலுள்ள, பிரதான சந்தேகநபருக்குச் சொந்தமான மற்றொரு கடையில் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பென் டிரைவ்களில் படம் பிரதியெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்தே இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரும், ஹவா எலிய பகுதியில் வசிப்பவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இருவரையும் நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.