முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 690 நான் மீண்டும் பதவிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களை ஒரு கை பார்ப்பேன் இரகசியமாக ரணிலிடம் சொன்ன விடயம் நடக்கப்போவது என்ன?

 

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம்

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம் | Modi Should Lead Tamil Political Solution Epdp
 By Laksi 6 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) முழுமையாக தலைமையேற்று பங்களிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (7) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அரசுக்கு வாழ்த்துக்கள்.

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக வலுப்பெற்று பின்னர் இந்நிய  இலங்கை ஒப்பந்தத்துடன்  இலங்கை தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்தது்.


இருந்தும் துரதிஸ்டமாக வன்முறைகள் தொடர்ந்தகொண்டிருந்தது. பின்னர் பன்னாட்டு சக்திகள் நாட்டின் உள் விவகாரங்களில் மத்தியஸ்தம் வகித்தும் பேரழிவுடன் வன்முறை அஸ்தமித்துப்போனது.

ரத்ன தேரர் தலைமையில் ஆரம்பமாகும் புதிய கூட்டணி

ரத்ன தேரர் தலைமையில் ஆரம்பமாகும் புதிய கூட்டணி

இலங்கை இந்திய ஒப்பந்தம்

தமிழர்களுடைய அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வம் எட்டப்படவில்லை. ஆயினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபை ஆட்சிமுறையே மிஞ்சியது.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம் | Modi Should Lead Tamil Political Solution Epdp

இருந்தும் காணி, காவல்துறை அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறப்பட்ட நிலையிலும் இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி.யினர் தமிழர்கள் ஒரு நிலத் தொடர் அலகாக வாழ்வதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்து பின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

அவ்வாறாக இருந்த சூழலில் ஜனநாயக முறைப்படி மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கமான முடிவின்றியே இருந்துவருகின்றது.

புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்

புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்

இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலம்

இந்த சூழ்நிலையில் மூன்றாவது முறையாக பாரத தேசத்தை பொறுப்பேற்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரரேந்திர மோடி அரசு இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் தலைமையேற்று முழுமையாக பங்காற்ற வேண்டும்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு மோடி தலைமையேற்க வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் பகிரங்கம் | Modi Should Lead Tamil Political Solution Epdp

 இலங்கை தொடர்பான அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு நலன்சார்ந்து இந்தியாவே இருந்து வருகின்றது.இருப்பினும் புரையோடிப்போயுள்ள தமிழர்களது அரசியல் தீர்வு விடயத்தில் 1983 இனக்கலவரம்முதல் இன்றைய பொருளாதார நெருக்கடி வரையும் இந்தியாவே தமிழ்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.

அதேபோன்று தற்போது பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முழுமையாக பங்காற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?