முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 762 இலங்கையில் நடக்கப்போவது என்ன?

 

வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர்

வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர் | Minor Tremor Reported In Vavuniya
 By Vethu an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

புதிய இணைப்பு

வவுனியாவில் பதிவான நிலநடுக்கம் பாரிய நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும் இடைப்பட்ட மரிக்காரம்பளையாகும்.

இந்த குவி மையம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.

இன்று காலை நான் இது தொடர்பாக இட்ட பதிவில் கருத்துரைத்த பலர் கல் அகழ்வுச் செயற்பாடுகள், மற்றும் குழாய்க்கிணறு தோண்டுதல் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலநடுக்கம் தோன்றியிருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் புவி நடுக்கத்திற்கும் இவைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

வவுனியாவில் நிகழ்ந்த புவிநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.

வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர் | Minor Tremor Reported In Vavuniya

எனினும், இந்த கல்லகழ்வு மற்றும் குழாய்க்கிணறுகள் புவி மேற்பரப்பில் இருந்து வெறுமனே 100 மீற்றருக்குள்ளேயே நிகழ்கின்றன என்பதுடன் இவை வேறுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

பொதுவாக எதிர்வு கூற முடியாத இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது.

 உலகின் பல பிரதேசங்களில் நிகழ்ந்த பாரிய புவி நடுக்க நிகழ்வுகள் இரண்டாகவே நிகழ்ந்துள்ளன.

முதலாவது மிக மெதுவானதாக வெறும் நடுக்கத்துடன் கூடியதாகவே அமைந்துள்ளது. இதனை உணர்ந்து கட்டுமானங்களை விட்டு வெளியே வந்து வெளிப்பிரதேசங்களில் நின்றால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது புவி நடுக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.

அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் பதிவாகின்ற நிலையில் இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம்


அத்துடன், அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும்.

குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வரட்சி, புயல், சூறாவளி, நிலச்சரிவு, புவிநடுக்கம் தொடர்பான இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் வீதி விபத்துக்கள் மற்றும் தீ விபத்துக்கள் பற்றியும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றினால் ஏற்படும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களை தவிர்க்க முடியும் என புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

முதல் இணைப்பு

 இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நிலநடுக்கம் பாரிய அழிவுக்கான முன்னெச்சரிக்கை: யாழ். பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர் | Minor Tremor Reported In Vavuniya

நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?