முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 761 தமிழர்களை மெது மெதுவாக அங்கிகரிக்கும் வெளிநாடுகள்?

 

பிரித்தானியாவில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழர்கள்: டேவிட்கெமரூன் வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானியாவில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழர்கள்: டேவிட்கெமரூன் வெளியிட்டுள்ள தகவல் | David Cameron Tamil Community In Britain
 By Shadhu Shanker 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

எங்கள் தேசிய வாழ்வின் பல பகுதிகளிலும் தமிழர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட்கெமரூன்(David Cameron) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின்(UK) பொதுதேர்தலிற்கு முன்னதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய தமிழர்களிற்கான கென்சவேர்ட்டிவ் கட்சியின்(Conservative Party) அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என குறிப்பிட்டுள்ளதுடன் எங்கள் நாட்டின் வாழ்க்கைக்கு நீங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகின்றீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நிஜ்ஜாருக்கு கனேடிய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி! இந்திய கனடா உறவில் விரிசல்

நிஜ்ஜாருக்கு கனேடிய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி! இந்திய கனடா உறவில் விரிசல்

பிரித்தானிய தமிழர்கள்

வர்த்தகம் முதல் கற்பித்த மருத்துவம்,உங்கள் உயிர்துடிப்புள்ள கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் நீங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகின்றீர்கள் . எங்கள் தேசிய வாழ்வின் பல பகுதிகளிலும் தமிழர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எமது தமிழ் சமூகத்தின் வெற்றிகள் பிரிட்டனின் எதனை சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு முன்மாதிரி. நாங்கள் உங்கள் அபிலாசைகளிற்கும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளிற்கும் எப்போதும் ஆதரவளிப்போம் என கூறினார்.

பல பிரித்தானிய தமிழர்கள் இலங்கையின் அண்மைக்கால வலிகளால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வருடம் இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன எனது நினைவுகள் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களை தேடுபவர்கள் குறித்ததாக உள்ளன குறித்ததாக உள்ளன என தெரிவித்துள்ளார்.

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் விநாயகத்தின் வீரச் செயல்கள் நிலைத்திருக்கும் : சீமான் அஞ்சலி

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் விநாயகத்தின் வீரச் செயல்கள் நிலைத்திருக்கும் : சீமான் அஞ்சலி

இழைக்கப்பட்ட குற்றங்கள்

15 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.


1948ம் ஆண்டின் பின்னர் இலங்கையின்(Srilanka) வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ( 2013 ) முதல் பிரதமர் அல்லது அதிபர் நான் என தெரிவித்துள்ள டேவிட் கமரூன் யுத்தத்தின் மோசமான விளைவுகள் குறித்து நான் நேரடியாக கேட்டறிந்துகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

அன்று நான் வழங்கிய அர்ப்பணிப்பு இன்றும் உள்ளது நீடிக்கின்றது ,என தெரிவித்துள்ள அவர் அனைவருக்கும் நீதி உண்மை பொறுப்புக்கூறலை பிரித்தானியா ஆதரிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமாற்றுக்கால நீதி ஆகியவற்றிற்கான சர்வதேச முயற்சிகளிற்கு நாங்கள் தலைமைதாங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?