முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 822 தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவம் இடையூறு (படங்கள்)

தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவம் இடையூறு (படங்கள்) தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தபட்டுள்ளது. குறித்த ஊர்திப் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மையில் பயணித்த போது இடையூறு ஏற்படுத்தபட்டிருந்தது. நினைவுப் பேரணி தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவம் இடையூறு (படங்கள்) | Sl Army Obstructs Tamil Genocide Vehicle Bawani முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்திப் பவனி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர், நினைவுப் பேரணி ஆரம்பமாகியிருந்தது. இந்தப் பேரணி முல்லைத்தீவிலிருந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களினூடாக மீண்டும் முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனி இன்று கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளது. இராணுவ இடையூறு தமிழ் இனப்படுகொலை ஊர

d 821 இதோ கனடாவின் புதிய பாஸ்போர்ட்..! வெளியான உத்தியோகபூர்வ காணொளி

இதோ கனடாவின் புதிய பாஸ்போர்ட்..! வெளியான உத்தியோகபூர்வ காணொளி மிக அழகாக வடிவமைக்கப்பட்ட' பாஸ்போர்ட்டைகனடா அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள்ளது. Passport Canada அதன் ட்விட்டர் பக்கத்தில், மே 10-ஆம் திகதி கனடாவின் புதிய பாஸ்போர்ட் வடிவமைப்புகளை காணொளியாக வெளியிட்டது. டுவிட்டர் பதிவு அதில், "இன்று கனடாவின் புதிய பாஸ்ப்போர்ட்டை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இதில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கனடாவின் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் நான்கு பருவங்களில் உள்ள மக்களை முன்னிலைப்படுத்தும் புத்தம் புதிய கலைப்படைப்பு ஆகியவை அடங்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை பதிவிட்ட ட்வீட்டில், மே 1 முதல் 7-ஆம் திகதி வரை 68,101 புதிய பாஸ்ப்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக Passport Canada சுட்டிக்காட்டியுள்ளது.

d 820 யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி நேற்று (12) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக இவ்வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது. யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! | Jaffna Mullivaikal Commemoration In University இந்நிலையில் ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமான இந்த நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மேலும் இறுதியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

d 819 தமிழரசுக் கட்சி கூட்டத்தில் அடிபாடு..! ஒருவர் வைத்தியசாலையில்

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் அடிபாடு..! ஒருவர் வைத்தியசாலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று(13) தொகுதிக்கிளை கூட்டம் இடம்பெற்றுள்ளது. மோதலுக்கான காரணம் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் அடிபாடு..! ஒருவர் வைத்தியசாலையில் | Fight Meeting Of Ilankai Tamil Arasu Kadsi Jaffna குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரிய வருகிறது. தாக்குதலில் காயமடைந்த ந.ஜெயமாறன் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் யாழ். காவல் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றினை அவர் பதிவு செய்துள்ளார்.

d 818 இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2023 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 83.4% அதிகரிப்பு இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள் | Increase In Foreign Worker Remittances இதனை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தமாக அனுப்பப்பட்ட பணம் 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

d 817 தமிழர் மீது தொடர்ந்து வண்முறையை விரும்பாத ஒரு சில சிக்களத் தலைவர்கள்,

சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் ஏன் இத்தனை விகாரைகள் - கொந்தளித்த தேரர் "தென்னிலங்கையில் இருக்கிற விகாரைகள் பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில், வடக்கு கிழக்கில் எதற்காக விகாரைகள். பெளத்த, சிங்கள மக்கள் இல்லாத இடத்தில், ஏன் இத்தனை விகாரைகள்." இவ்வாறு, யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் கொந்தளித்துள்ளார். வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதற்கு புதிய விகாரை சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் ஏன் இத்தனை விகாரைகள் - கொந்தளித்த தேரர் | Why New Buddist Temples Tamil Areas Therar Ask மேலும் அவர், "இராணுவம் எதற்காக புத்த விகாரைகளை அமைப்பதில் மும்முரமாக நிற்கிறது, இராணுவத்தினர் அவர்களின் வேலையை பார்க்க வேண்டும். ஆலயம் அமைப்பது, பராமரிப்பது இராணுவத்தின் வேலையல்ல, அது மதகுருமாரின் வேலைகள். அத்துடன் நெடுந்தீவு மற்றும் மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வேண்டும் என என்னிடம் வந்தார்கள், நான் அவர்களை விரட்டி விட்டேன். நான் சிங்களவன் தான், ஆனால் எப்போதும் நியாய

d 816 பள்ளி கொள்ளாத முள்ளிவாய்க்கால்

பள்ளி கொள்ளாத முள்ளிவாய்க்கால் நினைவுகள் **********************************************ஆர்ப்பரிக்கும் நந்திக் கடலே__ நாங்கள் தோற்றுப் போகவில்லை காற்றில் கலந்த காவலராய்__தமிழ் ஊற்றில் செறிந்த உணர்வுகளாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தோற்றுப் போகாத வரலாற்றுக்குப் பின் நீறாத ஒரு காவியமாய் உங்கள் இதயச் சுவரில் கனிமங்களாய் படிமமாய் பதிந்து விட்டோம். இறுதி யுத்தத்தில் எம்மோடு பயணித்த உறவுகளோடு எமை இணைத்துக் கொண்டோம். விறகாகிப் போனவர்கள் அல்ல நாம் உயிரான தேசத்திற்காய் உரமாகிப் போனவர்கள். நீசர்களின் நிரலுக்குள்ளே நிலை தளராது களமாடியவர்கள்.கடசிமட்டும் விடுதலையை விரதமாக்கி வித்தாகிப் போனவர்கள். காணாத கொடூரத்தை கட்டவிழ்த்து வீணாகப் மடிந்த எம் மக்களின் அவலத்தையும் கொடூதத்தையும் நீறாத நெருப்பாய் நெஞ்சில் சுமந்து உருகிப் போனவர்கள். நாங்கள் சிந்திய இரத்தக் கறைகள் கலைந்து விடாது. முள்ளிவாய்க்கால் அவலம் பல்லினம் சேர்ந்தழித்த படு பாதகம். மண்ணிலே மங்கிப் போகாத கனவுகளை சுமந்த தேகம் எம்முடையது. ஆண்டுகளின் எல்லையில் ஆற்றி விட முடியாத அழிவு இது மாண்டுவிட நாம் மனிதர்கள் அல்ல புனிதர்கள். மறுபடியும் மற