முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b275

 இலங்கையில் தொடரும் வண்முறை சீனக்குடாவில் படகொன்று விசமிகளால் தீக்கிரை சீனக்குடா , சின்னம் பிள்ளைச் சேனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று இனந்தெரியாத நபர்களினால் நேற்று (22) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சீனக்குடா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் பாதுகாப்பு , மற்றும் திருகோணமலை பட்டனமும் சூழலும் ஆகியோரின் அனுமதியினைப் பெற்று மேற்கூரை மற்றும் சொகுசு இருக்கைகளை அமைத்து இப் பயணச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவரோடு தனிப்பட்ட விரோதம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news b274

 வவுனியா வைத்தியசாலை சென்ற நபர் திடீரென கீழே விழுந்து மரணம்: பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு இருந்த போதே கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஓன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (23.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்து எடுப்பதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார். அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் வைத்தியசாலையை சேர்ந்தவர்கள் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து குறித்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவதற்காக தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு

TAMIL Eelam news b273

 தலிபான்களிடம் சரணடைந்தது அமெரிக்கா-ட்ரம்ப் கடும் சீற்றம் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு நேர்ந்த அவமானம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அலபாமா மாநிலத்தில் கல்மேன் எனுமிடத்தில் பேசிய டிரம்ப், தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஜோ பைடன் எடுத்த முடிவே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். ஜோ பைடன் நிர்வாகம் படைகளைத் திரும்பப் பெற்றது படைவிலக்கம் இல்லை என்றும், அது சரணடைந்ததற்குச் சமமாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். தான் பதவியில் இருந்திருந்தால் தலிபான்களால் இவ்வளவு விரைவில் நாட்டைக் கைப்பற்றியிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

TAMIL Eelam news b272

 சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம் தொடரும் இன வன்முறை பட்டப்பகலில் யாழ்ப்பாணத்தில் நடந்த கொடூரம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது என்றும் அவர்கள் வேறுபகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் அவர்களை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்தப்

TAMIL Eelam news b271

 இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்...உயிரிழந்தோர் எண்ணிக்கை 7366 ஆக உயர்வு இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள கொரோனா மரணத்தின் எண்ணிக்கை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் கடத்த சில நாட்களாக வேகமெடுத்துள்ளது. குறிப்பாக அங்கு இந்த தொற்றானது சிறுவர்களிடையே மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில்வெளியான தகவலானது இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் 183 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

TAMIL Eelam news b270

 செப்டம்பரில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்க மோடி திட்டம் செப்டம்பர் மாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை இந்தியா பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை அழைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் இறுதிக்குள் கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ அழைப்பை மோடி அரசு விடுக்கும் என்று கூறப்படுகிறது.

TAMIL Eelam news b269

 சிங்களவர்களின் பெரும் நரி கண்டனம் தாலிபன் ஆட்சியை இலங்கை ஏற்கக்கூடாது - ரணில் விக்ரமசிங்க ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். தாலிபன், ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை அடைவதாக இலங்கை அரசு தரப்பு கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.