முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 146 .நட்பற்ற நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள அறிவிப்பு!

நட்பற்ற நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள அறிவிப்பு! நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயற்படுத்த முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த மாற்றங்களை ஒரு வாரத்திற்குள் செயற்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசாங்கமும் மத்திய வங்கியும் இந்த நடவடிக்கைகளை ரஷ்ய நாணயத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்த ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு ஒரு வாரம் அவகாசம் இருப்பதாகவும், எரிவாயு ஒப்பந்தங்களில் தொடர்புடைய மாற்றங்களைச் செய்ய உத்தரவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. இதற்கிடையே, ரஷ்யா நட்பற்ற நாடுகளின் பட்டியலை அறிவித்தது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கனடா, நோர்வே, சிங்கப்பூர், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும். ரஷ்ய எரிவாயு மீதான தடைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்,

c 145 சிறிலங்கா அரசாங்கம் - புலம்பெயர் தமிழர் - சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்ப

சிறிலங்கா அரசாங்கம் - புலம்பெயர் தமிழர் - சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரச தலைவர் கோட்டாபய தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற சர்வ கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார். டயானா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என தெரிவித்தார் .30 வருட சுத்தத்தால் எம்மால் செய்ய முடியாதது

c 144 பறிபோகிறது தமிழர் தாயகப் பிரதேசம் -

பறிபோகிறது தமிழர் தாயகப் பிரதேசம் - மட்டக்களப்பில் திறக்கப்பட்டது சிங்களப்பாடசாலை(படங்கள்) யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதலாவது சிங்கள பாடசாலை திறப்பு விழா இன்று (24) கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றுள்ளது. சிறி சீலாலங்கார சிங்கள வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடசாலையானது பல கிராமங்களைச் சேர்ந்த 25 மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சிங்களப் பாடசாலைகள் 30 வருடகால யுத்தத்தின் போது மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிங்கள மக்களும் தென் மாகாணத்திற்கு இடம்பெயர்ந்ததாக மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் செயலாளர் வண.தேவாகல தேவலங்கார தேரர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிங்கள சமூகம் சம உரிமையும் கல்வி உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில்

c 143 வடகொரியா தடை செய்யப்பட்டஆயுதங்களை சோதனை செய்ததா?

வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. இன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வரும் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக பேசினார். இந்த மாநாட்டில், “எங்கள் வானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என மீண்டும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார். யுக்ரேன் வான் தளத்தை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரும் அழிவுகளையும், விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதை கண்கூடாக பார்த்துவருவதாக அவர் தெரிவித்தார். ரஷ்யா தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் வரையறையின்றி பயன்படுத்திவருவதாகவும், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பாலங்களை ரஷ்யப்படைகள் இலக்கு வைப்பதாகவும் ஸெலென்ஸ்கி கூறினார். இதுவரை யுக்ரேன் எந்தவொரு போர் விமானத்தையும் மற்ற நாடுகளிடமிருந்து பெறவில்லை என அவர் தெரிவித்தார். மேலும், தங்களுக்

c 142 ஜனநாயகத்தை மீறயுள்ளாரா?

துரை வைகோ: ‘உள்கட்சி ஜனநாயகத்தை மீறி தேர்வு’ – கட்சியினரின் அதிருப்தியும் வைகோவின் பதிலும் ம.தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிராக அக்கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ` கட்சிக்குள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க வேண்டாம் என ஒன்றரை மணிநேரம் வைகோவிடம் பேசினேன், அவர் கேட்கவில்லை' என்கிறார், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி. சம்பவம் 1: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சார்பாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வைகோவின் மகன் துரை வைகோ பங்கேற்று வந்தார் என கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு நிலவியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ம.தி.மு.கவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு ஒன்றை வைகோ நடத்தினார். `என் மகன் என்பதற்காக பதவி வழங்க வேண்டியதில்லை, ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம்' என்றார். இதையடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 106

c141 இலங்கையில் நாளிற்கு நாள் அதிகரிக்கும் பெண்களின் பாலியில் வெறி

மனைவியின் தகாத உறவு; விபரீதத்தில் முடிந்த சம்பவம்! இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் குடும்ப தலைவரால் வீட்டு அறைக்கு தீ மூட்டப்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. தனது மனைவி கள்ளக்காதலனுடன் அறையில் இருப்பதை கண்ட கணவன் படுக்கை அறைக்கு தீ வைத்த நிலையில் மனைவியும் கள்ளக்காதலனும் தீயில் கருகி பலியாகியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதான கணவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதவான் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்

c 140 இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை!

இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை! கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண்ணுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் இடம்பெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவ தினமும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மனமுடைந்த குறித்த பெண் கணவர் வெளியே சென்ற நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறுித்து கன்னியாகுமரி பொலிஸார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர் அறிவுரை ரீதியானது கூடுதலான பிள்ளைகளை பெத்த பெண்கள் குழந்தைகள் இல்லாதவர்களிற்கு தங்களின் அனுபவங்களை பகிர்வதின் ஊடாக அவ