முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b782

இலங்கையில் தொடரும் பாலியல் வெறியாட்டம் பயிரை மேய்யும் வேலிகள் தொடரும் சோகக் கதை கட்டுப்படுத்துவதற்கு முதுகலும்பு இல்லாத சிங்கள வெறியர்கள். கிழக்கின் முக்கிய பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் விரிவுரையாளர் முகம் சுழிக்கும் செயல்! சிக்கியது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரிடம் விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரிய விடயம் பெரிதும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவி தனது பல்கலைக்கழக கற்கையை இடைநிறுத்தும் நோக்கோடு பல்கலைக்கழக விடுதியில் இருந்தும் வெளியேறியுள்ளதுடன் இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கும் அறியப்படுத்தியுள்ளார். குறித்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உறிதிப்படுத்தும் படியாக விரிவுரையாளர் மாணவியோடு பேசிய குரல் பதிவுகள் சம்பவம் தொடர்பான முக்கியமான ஆதாரங்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்க

TAMIL Eelam news b781

தமிழர் பொருளாதரத்தை சிதைக்கும் நோக்கில் தீ வைக்கும் சிங்களக் கைக்கூலிகள். சற்றுமுன்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றிரவு (20-01-2022) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த தீப்பரவலலைபிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரு பகுதியிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவல் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b780

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்; கணவர் கைது மஸ்கெலியா- கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 24 வயதுடைய வசந்தமலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை தனது மனைவியை நித்தரையிலிருந்து எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்ததாக அப்பெண்ணின் கணவரால், மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த தம்பதியினர் இருவருக்கும் தொடர்ச்சியாக பிரச்சினைகள் காணப்பட்டதுடன், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அப்பெண், அவரது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அயலவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், நேற்று முன்தினம் இரவும் தம்பதிகள் இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கணவரை கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b779

அதிவேகத்தில் கடலில் மூழ்கும் ஜகார்த்தா நகர்…. போர்னியா தீவில் புதிய நகர் உருவாக்கம்…!!! புதிதாக மாற்றப்பட்ட தலைநகருக்கு நுசான்தாரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதி வேகத்தில் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தலைநகரை போர்னியோ தீவுக்கு மாற்றுவதற்கான அறிவிப்பை அதிபர் விடோடோ கடந்த 2019 வருடத்தில் வெளியிட்டார். ஆனால், கொரோனாத் தொற்று காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தலைநகரை மாற்றக்கூடிய மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

TAMIL Eelam news b778

எவளவுதான் கைக்கூலியாகச் செயல்பட்டாலும் சில உன்மைகளை மறைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சுமந்திரபண்டார ஜனாதிபதியின் சொல்லைக்கூட மதிக்காத இராணுவத்தினர்! எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றி சில மணி நேரத்தில் கட்டுவனில் தமிழ் மக்களின் நிலத்தை அபகரித்து படையினர் வீதி அமைக்கின்றனர். இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் பொய் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "நேற்றைய நாடாளுமன்ற சம்பிரதாய உரையில் இந்த நாட்டின் ஜனாதிபதி நான் தான் என்பவர் கூறுகின்றார்.மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுமென ஆனால், அன்றைய தினமே கட்டுவன் மயிலிட்டி வீதியில் வெறும் 400 மீற்றர் நீளமும், 26 மீற்றர் அகலமும் கொண்ட நிலத்தைக்கூட விடமாட்டோம் எனப் படையினர் அடாத்தாக வீதி அமைக்கின்றனர். அவ்வாறெனில் இந்த நாட்டிலே ஜனாதிபதியின் சொல்லைக்கூட மதிக்கா

TAMIL Eelam news b777

தொடர்ந்து இந்தியாவை நம்பி ஏமாரும் வேலையை தமிழ் தரப்புக்கள் கை விட வேண்டும் ஐரோப்பியா நாடுகளின் அழுத்தம் ஊடாகவே தமிழர்களிற்கு சிறு தீர்வாவது கிடைக்கலாம் என்பதை தமிழர்கள் மறந்து விடக் கூடாது ழும்பில் இருந்து தமிழர் தரப்பின் முக்கிய ஆவணத்துடன் டெல்லி பறந்த சிறப்பு விமானம்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சின் உரையானது ஒரு பேச்சுக்காக ஜனாதிபதி வழங்க வேண்டும் என்பதற்காகவே வழங்கியிருக்கின்றார். இதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தொடர்பில் சொல்லப்படவில்லை என டெலோ அமைப்பினுடைய சர்வதேச பொறுப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாருக்குமே எந்த பிரயோசனமும் இல்லாத ஒரு சம்பிரதாயபூர்வமான உரையாக மாத்திரமே இதனை பார்க்க வேண்டியிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளினுடைய ஒருங்கமைவில் இந்தியாவுக்கான ஒரு கடிதம் வரையப்பட்டிருக்கின்றது. அந்தக் கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்திய பிரதமரிடம் இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டம், குறிப்பாக இலங்

TAMIL Eelam news b776

வெளிநாட்டில் உள்ளவர்களிற்கு இலங்கையர்கள் மீது கொன்ற வெறுப்பே கொலைக்கான காரணமாகக் கருதப்படுகின்றது. அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்! மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் சவூதி அரேபியா ஜித்தாவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மட் மபாஸ் (31) என கூறப்படுகின்றது. ஜித்தாவிலுள்ள வீடு ஒன்றில் சாரதியாக தொழில் புரிந்து வந்த நிலையில் குறித்த நபர் அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் காத்தான்குடியை பிறப்பிடமாகவும் பூநொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இரண்டு வருட காலத்தை நிறைவு செய்த பின்னர் அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஊர்வர இருந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் சடலம் ஜித்தாவிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.