முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b393

 அவுஸ்ரேலியாவை மிரட்டிய சீனா -ஏவுகணை சோதனை நடத்தி எச்சரித்த அமெரிக்கா அவுஸ்ரேலியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்று மிரட்டிய சீனாவை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா அணுசக்தி ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. பிரான்ஸ் உடன் செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் இணைந்து அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கப் போவதாக அவுஸ்ரேலியா அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, அவுஸ்ரேலியா மீது அணுசக்தி தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மிரட்டி இருந்தது. சீனாவை எச்சரிக்கும் வகையில், யுஎஸ்எஸ் வயோமிங் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லத்தக்க இரு பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியது. தேவையென்றால் இந்த ஏவுகணைகளின் தாக்குதல் தூரத்தை நீட்டிகொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்ககது.  

TAMIL Eelam news b392

 யாழில் கணவனின் கொலையில் மனைவியுடன் சிக்கிய மற்றுமொருவர்! வெளியான திடுக்கிடும் தகவல் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.  கொலை செய்யப்பட்டவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார், மனைவியுடன் அவருக்கு இருந்த இரகசியத் தொடர்பால் எழுந்த சிக்கல் குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் தொடக்க விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் நேற்றிரவு  திருகுபலகை கட்டையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில

TAMIL Eelam news b391

 யாழில் நடந்த கொடூரம் - கணவனை அடித்துக் கொன்ற மனைவி யாழ்ப்பாணத்தில் கணவனை அடித்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப முரண்பாடு முற்றியமையினால் அது வன்முறையாக மாறியது. இந்நிலையில் மனைவியின் கடுமையான தாக்குதலுக்குள்ளான 32 வயதான துரைராசா செல்வராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர். உடனடியாக சந்தேக நபரான மனைவி கைது செய்யப்பட்டார். திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் ஐந்திற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

TAMIL Eelam news b390

  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற மனோ கணேசனிடம் கைதிகள் வெளியிட்டுள்ள தகவல் 2 hours ago             4 SHARES விளம்பரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரம் சிறைக்குச் சென்று இடையூறுகளுக்கு மத்தியில் தமிழ் அரசியல் கைதிகளை மனோ கணேசன் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறினார். நாம் சிறைச்சாலைக்கு வருகை தரவுள்ளதாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று எமக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சபாநாயகரை தொடர்பு கொண்டதன் பின்னரே எமக்க

TAMIL Eelam news b389

 காபூலில் ட்ரோன் தாக்குதல்- மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம் – என்ன நடந்தது ? காபூல் விமான நிலையத்தை குறிவைத்து, ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் கோரசான் பிரிவு பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 13அமெரிக்க வீரர்கள் உட்பட 175 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.எஸ்.கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.   இதில், பொதுமக்கள் பத்து பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். பதிலடி தாக்குதலின் போது, அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் கிடைத்ததால், ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

TAMIL Eelam news b388

 விக்டோரிய மாநிலத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உச்சத்தில்; பூர்வீக குடி மக்களுக்கு விரைந்து தடுப்பூசி வழங்குகிறது NSW அதிகப்படியான பூர்வீக குடி மக்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாட்டில் NSW அரசு இறங்கியுள்ளது விக்டோரிய மாநிலத்தில் ஆறு மணி நேரம் பொது போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம் Moderna தடுப்பூசி நாட்டுக்கு வந்துவிட்டது குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்   நியூ சவுத் வேல்ஸ் New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,331 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.  தொற்றுள்ளவர்களில் 1,219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் NSW மாநிலத்தில் தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களில் 81.2 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் பெற்றுள்ளதாகவும், 50.6 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty கூறினார். 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பூர்வீக குடி மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த வ

TAMIL Eelam news b387

 இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? இனி என்ன நடக்கும்? சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு எம்.ஏ.எம். ஹக்கீம் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் இலங்கை விவகாரம் தொடர்பாக பேசினார். அதை விரிவாக இங்கே தொகுத்தளிக்கிறோம். "மனித உரிமைகள் பேரவை ஆணையரின் அறிக்கையை நிராகரித்தமையானது, அந்தப் பேரவைக்கு விடுத்த சவாலாகவே கொள்ளப்படும். சர்வதேசத்துக்கு சவால் விடுவதென்பது தவறானதொரு விடயமல்ல. ஆனால், தற்போதைய நிலையில் இலங்கை இவ்வாறானதொரு சவாலை விடுத்திருப்பது பொருத்தமானதல்ல," என்று அவர் கூறினார் . இலங்கையில் ஆயுத மோதல் நிறைவடைந்ததில் இருந்து தற்போது வரையான காலப்பகுதியை முன்றாகப் பிரிக்கலாம். முதலாவது 2009ஆம் ஆண்