முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 902 மட்டக்களப்பில் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

  மட்டக்களப்பில் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! Batticaloa Sri Lanka Eastern Province  By Laksi   9 hours ago விளம்பரம் மட்டக்களப்பு (Batticaloa) - குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் சடலமானது இன்று (8) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருக்கள்மடம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உயர்தர மாணவனை தாக்கிய அதிபர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கைது காவல்துறையினர் விசாரணை இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டு மீட்டுள்ளனர். இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதோடு, சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் காவல்துறையினர் தெரிவி

f 901 இலங்கையில் ஆயுத வண்முறையூடாக தனக்கு எதிரான தேர்தல் பிரச்சாரங்களை கட்டுபடுத நினைக்கும் அரசு நடப்பது என்ன?

  கொழும்பு துப்பாக்கிச் சூடு ; கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட பாடகி சுஜீவா Batticaloa Colombo Colombo Hospital Gun Shooting  By Sahana   3 hours ago             விளம்பரம் கொழும்பு அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று (08) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே. சுஜீவா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யாழ். சாவக்ச்சேரியிலிருந்து வெளியேறி கொழும்புக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா இன்று மதியம் 2 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர்கள், இரத்தக் குழாய் சத்திர சிகிச்சை நிபுணர்கள், எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது சத்திரசி கிச்சை நிபுணர்கள் ஆகிய 4 குழுக்கள் இந்த சத்திர சிகிச்சையில் பங்குபற்றியுள்ளனர். தற்போது பாடகி கே. சுஜீவா நலமாக இருப்பதாகவும், கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்ற முடிந்தது என்றும் கூறினார். பாடகி கே. சுஜீவா மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பதோடு, பிரபல பாடகர் மகிந்த குமாரின் சகோதரியும் ஆவார். இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்

f 900 பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது : ரேச்சல் ரீவ்ஸ்

  பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது : ரேச்சல் ரீவ்ஸ் United Kingdom World  By K. S. Raj   3 hours ago             Report விளம்பரம் பெண்களின் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என பிரித்தானியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் மூலமாக கூறியுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் குழப்பம்: வைத்தியரை அகற்றும் முயற்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் பொருளாதார மாற்றம் இது தெடர்பில் அவர் மேலும்  கூறியிருப்பதாவது, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். இது என்ன பொறுப்பைக் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன். மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்புடன் வருகிறது. இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்

f 899 மாமியாரை படுகொலை செய்து குழந்தைகளை பணயக் கைதிகளாக்கிய யாழ்ப்பாண பெண்

  மாமியாரை படுகொலை செய்து குழந்தைகளை பணயக் கைதிகளாக்கிய யாழ்ப்பாண பெண் Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation  By Dilakshan   11 hours ago விளம்பரம் மாமியாரை படுகொலை செய்து விட்டு பணயக் கைதிகளாக தனது குழந்தைகளை பிடித்து வைத்திருந்த யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த பெண் ஒருவரை கம்பளை எத்கால காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் போது, கம்பளை உலப்பனை தோட்டத்தில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான எஸ்.ஜோதி(78) என்பவரே நேற்று இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான வீட்டில் 32 வயதான மருமகளும் அவரது 7 மற்றும் 4 வயதுடைய மகள்களும் மாத்திரமே இருந்ததாகவும், நேற்று நள்ளிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் படுகொலை  சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரான பெண், திருமணத்தின் பின்னர் உலப்பனை தோட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், அவரது கணவர் வேலைக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளார். படுகொலை

f 898 வவுனியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மாயம்

  வவுனியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மாயம் Sri Lanka Police Vavuniya Sri Lanka  By Shalini Balachandran   4 hours ago விளம்பரம் வவுனியா (Vavuniya), கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய குறித்த மனைவி அவரது பிள்ளைகளான கம்சனா (வயது 11) மற்றும் சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். இருப்பினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், மனைவியும் வீடு திரும்பவில்லை என்றும் அத்தோடு தானும் உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை என கணவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி காவல்துறையில் முறைப்பாடு  இதனையடுத்து, மனைவியையும், இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்தால் 0765273860 என்னும் தொலைபேசி இல