e 493 மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு
மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு By Rakesh 6 மணி நேரம் முன் Report விளம்பரம் மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்குமாறு சமர்ப்பித்த விண்ணப்பங்களை, சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நீதிமன்றம் இன்று (17.11.2023) நிராகரித்துக் கட்டளை வழங்கியுள்ளது. அந்நிகழ்வுக்கு தடை விதிக்கவும், அந்நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும், கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்விண்ணப்பங்கள் இன்று நீதிமன்றத்தால் நிராகரித்துக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. 31 வருடமாக தென்னாபிரிக்காவை துரத்தும் துரதிஷ்டம்! கண்ணீர் சிந்தியும் ஏன் கனவு கைகூடவில்லை.. முன்னிலையான சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மேற்படி பிரமுகர்கள் அனைவர் சார்பிலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளில் பெரும் எண்ணிக்கையானோரின் அனுசரணையுடன் இன