முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 558 உடும்பன்குளம் படுகொலை...

தமிழரின் உடல்களால் உரம்பெற்ற சான்றுகளில் ஒன்றுதான் உடும்பன்குளம் படுகொலை... தாயகத்தின் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைதான். தமிழரின் உடல்களால் உரம்பெற்றவைதான். அதற்குப் பல சான்றுகள் உண்டு. அதில் ஒன்றுதான் உடும்பன்குளம் படுகொலை உடும்பன்குளம் படுகொலைகள் அல்லது அக்கரைப்பற்று படுகொலைகள் 1986 பெப்ரவரி 19ம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகருக்கு அருகாமையில் உள்ள உடும்பன்குளம் என்ற சிறு வேளாண்மைக் கிராமத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் ஏறத்தாழ 80 இலங்கைத் தமிழ் வேளாண்மை மக்கள் படைத்துறையினர், ஊர்காவல்படையினர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் பெப்ரவரி 19 இடம்பெற்றிருந்தாலும், இது பற்றிய தகவல்கள் சில நாட்களுக்குப் பின்னர் இக்கிராமத்திற்கு சென்றிருந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மூலம் தெரிய வந்தது. ஒழுங்கான விசாரணைகளும் இடம்பெறவில்லை தமிழரின் உடல்களால் உரம்பெற்ற சான்றுகளில் ஒன்றுதான் உடும்பன்குளம் படுகொலை... | Udumbankula Massacre The Only Testimony இவர்களின் கூற்றுப் படி, நெல் வயல்களில் வேள

d 557 உன்மை உறங்காது என்பதற்கு இது ஒரு உதறணம்

இறுதி போரில் அமெரிக்காவின் சதி - ஒன்பது கப்பல்களை அழிக்க இரகசிய உதவி தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களின், உரிமை பாதுக்கப்படும் வகையில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒன்பது கப்பல்கள் இறுதி போரில் அமெரிக்காவின் சதி - ஒன்பது கப்பல்களை அழிக்க இரகசிய உதவி | Sri Lanka War Crimes 2009 Us Help அவர்களின் மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல் தன

d 556 படிப்படியாக இந்தியாவின் கைக்குள் செல்லும் இலங்கை

தமிழர் தாயகத்தில் ஆழமாக வேரூன்றும் இந்திய கோடீஸ்வரர் - வழங்கப்பட்டது அனுமதி வடக்கில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை முதலீட்டுச் சபை, இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளது. மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இந்த காற்றாடி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இரண்டு ஆண்டுகளில் 350 மெகாவாட் மின்சாரம் தமிழர் தாயகத்தில் ஆழமாக வேரூன்றும் இந்திய கோடீஸ்வரர் - வழங்கப்பட்டது அனுமதி | Adani Is Deeply Rooted In The Tamil Homeland இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 350 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

d 555பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் போராளி உயிரிழப்பு!

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் போராளி உயிரிழப்பு! பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன் தினம் பிரான்ஸின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம் வட்டாராம் முள்ளியவளை, முல்லைத்தீவு மாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்ட குணசிங்கம் மோகனராஜன் எனும் முன்னாள் போராளியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் போராளி உயிரிழப்பு! | Former Fighter Dies In Accident In France அதிவேகமாக சென்ற கார் 2009 ஆம் ஆண்டு போரின் பின்னர் பாதுகாப்பு கோரி பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அதிவேகமாக சென்ற கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அதோடு பிரான்ஸில் பிரபல வானொலியின் அறிவிப்பாளராகவும் அவர் செயற்பட்டு வந்தவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது மரணம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

d 554 ஈழத்தை ஆக்கிரமிக்கும் பாஜக - சிக்கிவிட்டார்களா ஈழத்தமிழர்கள்..!

ஈழத்தை ஆக்கிரமிக்கும் பாஜக - சிக்கிவிட்டார்களா ஈழத்தமிழர்கள்..! பிரகாரன் உயிருடன் இருந்தால் அது உண்மையாகும் வரை காத்திருக்கலாம் எனவும் ஒருவேளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் அனுமதியோடு தான் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரன் அவர்கள் வெளிவருவதற்கான களம் இலங்கையிலும் உலக நாடுகளிலும் ஏற்படுத்தப்பட்டதாக பழ.நெடுமாறன் தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி இந்தியா மட்டும் இல்லை என்றும் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பலர் தற்போது ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளமையால் அந்த நாடுகளும் எமது தொப்பிள் கொடி உறவுகள் தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாஜக எமது நலன் சார்ந்து குரல் கொடுத்தால் நல்லது என்றும் ஆனால் அவர்களின் கட்சி சார்ந்த செயற்பாடுகளை நுழைப்பது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். பாஜகவின் செயற்பாடுகள் ஈழத்தில் அதிகரித்துள்ளமையால் ப

d553 இப்பாதகச் செயலை எவரும் செய்ய வேண்டாம்,

இலங்கையில் இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்; குடும்ப பிரச்சனையால் பறிபோன உயிர்கள்(Photos) இரத்தினபுரி கரபிஞ்ச அக்கர 16 என்ற இடத்தில் ஒன்று மற்றும் ஆறு வயதுடைய தனது மகன்களை தாயாரே தண்ணீரில் முக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துயர சம்பவம் இரத்தினபுரி குருவிட்ட கரபிஞ்ச வத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்; குடும்ப பிரச்சனையால் பறிபோன உயிர்கள்(Photos) | Mother To Her Children Killed சம்பவத்தில் 7 மற்றும் ஒன்றரை தனது இரண்டு ஆண் குழந் தைகளை கிணற்றில் தள்ளியதால் இரண்டு பிள்ளைகளும் மரணமடை ந்துள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதமே இந்நிலைமை க்கு காரணம் என ஆரம்ப விசாரிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலீசார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

d 552 இனம் சார்ந்தவர்களிற்கு நன்கொடைவழங்குவதில் தமிழர்கள் முன் நிலையில்,

யாழ்ப்பாணத்தில் தனது காணிகளை இலவசமாக வழங்கிய புலம்பெயர் தமிழ் பெண் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர் யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். வேலணை - கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார். பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது. கோரிக்கை யாழ்ப்பாணத்தில் தனது காணிகளை இலவசமாக வழங்கிய புலம்பெயர் தமிழ் பெண் | Person Lives In Canada Distributed The Land இந்த நிகழ்வில் வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.