முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 195 இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்

இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பத்து வருடத்திற்கு முன்னர் சென்ற சாமி இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் | Sri Lankan Tamils Death In Australia சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த விசா கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். இதுவரை கிடைக்காத நிரந்தர விசா இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் | Sri Lankan Tamils Death In Australia சாமியின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு விசா கிடைத்த பின்னர், அவர்க

d 194 இளைஞன்! தேடும் பணி தீவிரம்

யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி பாலத்தில் வீழ்ந்துள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (22-12-11-2022) இடம்பெற்றுள்ளது. யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் | Youth Missing Suddenly Falls On A Bridge In Jaffna மேலும் இச்சம்பவத்தில் புத்தூர் - சுலைமதி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் | Youth Missing Suddenly Falls On A Bridge In Jaffna இதன்போது அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞர்களை, மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆரம்பமானது நினைவேந்தல்

தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது நினைவேந்தல் யாழ்ப்பாணம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் நேற்று (21) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார். தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

d 192 மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - யாழ் பல்கலையில் நினைவேந்தல் மாவீரர் வாரம் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - யாழ் பல்கலையில் நினைவேந்தல் | Heroes Week Begins Photos Jaffna தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

d 191பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் துப்பரவுப்பணி

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சிரமதான பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டிருந்தார். இந்த சிரமதான பணியில் ஆண்கள், பெண்கள் என அனைரும் இணைந்து உணர்வுபூர்வமாக சிரமதான பணியினை மேற்கொண்டனர். தொடர்ந்து இவ்வாரம் முழுவதும் இந்த துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்று உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

d 190 குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

மதிப்பிற்கு உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ மக்களே எதிர்வரும்26 /11/2022 எமது வளிகாட்டியான மேதகு வேலிப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68 அகவை பிறந்தநாளை வழமை போன்று குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெகு சிறப்பாகக்கொண்டாடுவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம், அதைவிட எமது தலைமகன் பிறந்தநாளை ஒட்டி இவ் நிகழ்வு நடைபெறயிருப்பதால் அனைத்து மக்களிற்குமான சிற்றூண்டிகள் உணவு என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அத்தோடு எமது தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிவீரச்சாவு அடைந்த மாவீரர் பெற்றோர் உறவினர்களிற்கான பரிசிப்பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம், வளி காட்டியின் இலக்ஸ்சிய உணர்வையை அடுத்ததலைமுறைக்கு விதைப்பதோடு அவரின் கனவை நனவாக்க நாம் அனைவரும் அவரின் தமிழீழக் கொழ்கையை ஏற்றுக்கொழ்வோம், நாம் ஐந்து வருடங்களாக இவ் நிகழ்வை சிறப்பான முறையில் செய்து வருகின்றோம் என்பதை தாங்கள் அறிவீர்கள், நன்றி தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் காலம் 26/11/2022 இடம் oxley club நேரம் மாலை5 - 10 am ஏற்பாடு ஈழ வேர்கள் பன்பாட்டுக்கழகம் தொடர்பு திருமதி பிருந்தா. 0424647150 திரு சுரேஸ் 0466782884

d 189 தேவையற்ற ஆசையால் தேடிக்கொண்ன்ற பெறுமதி,?

யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்! யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த யுவதி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் அருகிலுள்ள நீர்த்தேக்கத்திற்கு நீராட சென்றுள்ளார். யுவதியின் மரணம் யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்! | Kilinochchi Girl Drowned In Vadamarachi இதன்போது நீரில் மூழ்கிய நிலையில் அதனை அவதானித்த நண்பர்கள் சத்தமிட்டு அருகிலுள்ள இராணுவத்தினர் யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குறித்த யுவதிஉயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.