முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 430 தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி இந்தியாவில துயரம்

டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - குடியரசு தலைவர், பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல் ட டெல்லி முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட கட்டட பகுதிImage caption: டெல்லி முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட கட்டட பகுதி டெல்லியின் முண்ட்காவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் புறநகர் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சமீர் சர்மா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கூடுதல் துணை ஆணையர் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவித்தார். டெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி, "இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், 14 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது," என்று கூறினார். குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல் இந்திய குடியரசு தலைவ

c 429 தமிழர் பகுதியின் மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ்

சத்தமில்லாது தமிழர் பகுதியின் மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்! இலங்கையில் வடமேல் மாகாணத்தின் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனன் ஒன்றுக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரிசார்ட் ஒன்றை உருவாக்க சுவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த “குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக்கெடு நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் அதற்காக சுவிஸ் நிறுவனம் இலங்கைக்கு வந்தது. அந்நிறுவனத்தின் மொத்த ஆரம்ப முதலீடு 417 மில்லியன் டொலர்கள்” என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார். இந்நிலையில் உச்சிமுனைத் தீவை மேற்படி சுவிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுற்றுலா சேவை வழிக்காட்டிகள் சங்கம் (ACTSPA) நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ACTS

c428 தீர்மானத்தை மாற்ற முடியாது கோட்டாபய

புதிய அமைச்சரவை குறித்து சஜித்திற்கு கோட்டா அனுப்பிய அவரச கடிதம்! ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதாக முன்னர் அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் சில நிபந்தனைகள் உள்ளதாகவும் அவை இன்னும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானத்தை மாற்ற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது நாட்டுக்கான நலனாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் , எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எவரேனும் இணைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி , சஜித்துக்கு அனுப்பி

c 427 மகிந்த நமால் உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை-

மகிந்த நமால் உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை- ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம் ! மகிந்த ராஜபக்ஷ, நமால் , ஜோன்ஸ்டன் உட்பட 17 பேருக்கு உச்ச நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. போராட்டக் காரர்கள் தொடுத்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த 17 பேரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் ராஜபக்ஷர்கள் குடும்பத்தினர் மீது பெரிய இடி இறங்கியுள்ளது. இது போக மகிந்தவுக்கு எதிராக பல வழக்குகளை பதிவு செய்ய, சட்டத்தரணிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது உள்ள நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றில், மகிந்தவுக்கு எதிராக போர் குற்ற வழக்கை கூட தொடுக்க முடியும் போல இருக்கே ? பாருங்கள் காலம் எப்படி எல்லாம் மாறுகிறது என்று. இலங்கையின் அரசனாக தன்னை அறிவித்து. சிங்கள மக்கள் தன்னை தலைமேல் வைத்து … கொண்டாடுவார்கள் என நினைத்து, காலத்தை கழித்து வந்தார் மகிந்த. ஆனால் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கம் மகிந்தவை மட்டும் அல்ல, முழு ராஜபக்ஷர்களையும் அழித்து விட்டது. சகல உலக நாடுகளுக்கும் பெரும் இழப்பை கொடுத்த கொரோனா வைரஸ், தமிழர்களுக்கு மட்டும் நல்லதே செய்துள்ளது. இதன

c426 வரலாறு பற்றி பேச அங்கஜனுக்கு என்ன தகுதி

தமிழர்களின் வீர வரலாறு பற்றி பேச அங்கஜனுக்கு என்ன தகுதி - யாழிலிருந்து கேள்வி 2009 முள்ளிவாய்க்காலில் எங்களது உறவுகளின் இரத்தத்தை குடித்த காட்டேறிகளின் ஆட்சிக்கு 2010ல் இருந்து ஆதரவளித்து வரும் அங்கஜன், எமது வீர வரலாறு தொடர்பாக பேசலாமா என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் கேள்வியெழுப்பினார். அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில், 2009 ல் எங்கள் உறவுகளின் இரத்தம் காயமுன்னர், எங்கள் உறவுகள் கம்பிவேலிக்குள் இருந்த நேரத்தில் தமிழர்களை வென்ற வீரனாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்தவை ஆதரித்து, 2010 நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த கட்சியில் வேட்பாளராக நின்று சக வேட்பாளர்களுடன் வாக்குக்காக அடிதடியில் ஈடுபட்டு துப்பாக்கி பிரயோகம் வரை சென்ற அங்கஜன் வன்முறை தொடர்பாக எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற என்ன தகுதி இருக்கின்றது? 2015 ல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொலைகார ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கையில் தனது பதவி ஆசைகளிற்காகவும் தனது வியாபாரத்தை பாதுகாக்கவும் எமது மக்களிற்கு மாறாக மகிந்தவுக்காக வாக்கு

c 425 டீல் அரசியல் வேண்டாம்

டீல் அரசியல் வேண்டாம் - ரணிலுக்கு எதிராகவும் வெடித்தது போராட்டம்(படங்கள்) புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து (ஜன. 12) அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டக்காரர்கள் டீல் அரசியலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதனைக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரணில், ராஜபக்ச வீட்டுக்குச் செல்லுங்கள் என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

c 424 பெரும் அரசியல் மாற்றம் - இரா.சம்பந்தன்

தென்னிலங்கையில் ஏற்பட்ட பெரும் அரசியல் மாற்றம் - இரா.சம்பந்தன் வெளியிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் வங்குரோத்து நிலைக்குச் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்சதேச ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கையில் அரசியல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் அரசியல் கட்சிகள் சேற்றில் மீன்பிடித்து கட்சி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நிகழ்வுகளும் அரசியல் தீர்மானங்களும் ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்கு அமைவாக அமைய வேண்டும். தென்னிலங்கையில் ஏற்பட்ட பெரும் அரசியல் மாற்றம் - இரா.சம்பந்தன் வெளியிட்ட தகவல் போராட்டங்களின் போது கொலைகள், தீ வைப்பு, சொத்து சேதம் என்பன இடம்பெறக்கூடாது என தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போது தென்னிலங்கை மக்களால் மகத்தான மனிதர்