முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b495

இரகசிய தகவலை அடுத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் குவிப்பு முள்ளிவாய்க்கால் - குறுந்தடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதையல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் அப்பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அப்பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் குறுந்தடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத் தலைவர் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், கடிதமொன்றினையும் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

TAMIL Eelam news b494

கொலை செய்யப்பட்ட தனது ஜோடி பாம்பு: பழிவாங்க காவல்நிலையம் வந்த பாம்பு! பின்பு நடந்தது என்ன? இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் பாம்பு ஒன்று தனது ஜோடி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்து செய்த காரியம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சற்று தொலைவில் ஜோடி பாம்புகள் இருந்துள்ளது. காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நபர், புகார் கொடுத்துவிட்டு தனது காரில் கிளம்பிய போது, அந்த ஜோடி பாம்பு ஒன்றின் மீது கார் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை அவதானித்த மற்றொரு பாம்பு குறித்த காரை வேகமாக துரத்திக்கொண்டே சென்றுள்ளது. பாம்பு சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட சிலர், காவல் நிலையம் அருகே குழி தோண்டி புதைத்துவிட்டனர். மற்றொரு பாம்பு இனிமேல் இங்கு வராது என்று நினைத்த நிலையில், குறித்த பாம்பு புதைக்கப்பட்ட இடத்திற்கு மற்றொரு பாம்பு திடீரென வந்துள்ளது. அங்கு சிறிது நேரம் காத்திருந்த பின்பு, காவல் நிலையத்திற்குள் சென்ற அந்த பாம்பு, மறியல் செய்வதுபோல் அங்கு படமெடுத்து அமர்ந்ததை அவதானித்த பொலிசார்

TAMIL Eelam news b493

விடுதலை புலிகளால் துரோகிகளென குறி வைக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பில்! மனோ பகிரங்க குற்றச்சாட்ட ு தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார். யாழில் பிரபா கணேசனுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் தனது முகப்புத்தக பதிவில் விளக்கம் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மகிந்த அரசுடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள். ஆயுதப்போர் என்பது அழிவுப்போர் என்று சொல்பவர்களும் உள்ளார்கள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்தது காலத்தின் கட்டாயங்கள். “எது சரி, எது பி

TAMIL Eelam news b492

இலங்கைக்கான சீனத் தூதுவர் வி.ஜென்ஹான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று (22) இடம்பெற்றது. இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்துவம் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கும் நட்பு ரீதியான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கும் தற்போதைய கடன் நெருக்கடியை நிர்வகிப்பதற்குத் தேவையான ஆதரவையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவு கூர்ந்த சீனத் தூதர் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

TAMIL Eelam news b491

யாழில் தொடரும் சிங்களக் கைக்கூலிகளின் அட்டகாசம் இரவு வேளை வீடு புகுந்து வாள்வெட்டு குழு கொடூர தாக்குதல்! யாழில் இரவு வேளையில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டிலிருந்து பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு (21) வியாழக்கிழமை யாழ்.யாழ்.நீர்வேலி தெற்கு J/268 கிராமசேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சம்பவத்தில் 4 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர் வீட்டுக்குள் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்து பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்று காலை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) வடக்கில் வன்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து முப்படை தளபதிகள், பொலிஸார், மற்றும் அதிரடிப்படையினருடன் பேச்சு நடத்தியிருந்தார். அந்த பேச்சு நடந்த அன்று மாலையே வாள்வெட்டு குழுவினர் இவ்வாறு அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b490

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்திற்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கலடி - கொடுவாமடு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 63 வயதான குஞ்சித்தம்பி காலிக்குட்டி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று மாலை செங்கலடி கருத்தப்பாலத்திற்கருகே மாடு மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு காவலுக்கு செல்லும் போதே காட்டு யானை தாக்கியுள்ளது. இதன்போது, சம்பவ இடத்தில் கூடிய பொது மக்கள் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் காட்டு யானை அட்டகாசத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நீண்ட காலமாக தாங்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் இராஜாங்க அமைச்சரோ , நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லையெனவும், நாட்டின் ஜனாதிபதிக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையே உள்ளதாகவும், இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்களையே தெரிவிப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இதேவேளை, குறித்த இடத்திற்கு வ

TAMIL Eelam news b489

கப்டன் வானதி அக்கா களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை எழுதுங்களேன் நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! ஏராளம்……. ஏராளம்…. எண்ணங்களை எழுத எழுந்துவர முடியவில்லை, என் துப்பாக்கி எழுந்து நிற்பதால். எழுந்துவர என்னால் முடியவில்லை! எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! சீறும் துப்பாக்கியின் பின்னால் என் உடல் சின்னா பின்னப்பட்டு போகலாம் ஆனால் என் உணர்வுகள் சிதையாது உங்களை சிந்திக்க வைக்கும். அப்போது எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! மீட்கப்பட்ட – எம் மண்ணில் எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால் அவை உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ அன்றேல் மலர் வளைய மரியாதைக்காகவோ அல்ல! எம் மண்ணின் மறுவாழ்விற்கு உங்கள் மன உறுதி மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காகவே. எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! அர்த்தமுள்ள என் மரணத்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில் நிச்சயம் நீங்கள் உலாவருவீர்கள்! அப்போ எழுதாத என் கவிதை உங்கள் முன் எழுந்து நிற்கும்! என்னை தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் அரவணைத்தவர்கள் அன்பு காட்டியவர்கள் அத்தனை பேரும் எழுதாது எழுந்து நிற்கும் கவிதைக்குள் பாருங்கள்! அங்கே நான் மட்டு