முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b136

 அதிகரிக்கும் ஆட்கடத்தல் கடும் கவலையில் பெற்றோர்கள். முல்லைத்தீவு யுவதி ஒருவரைக் காணவில்லை; தாயார் முறைப்பாடு முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b135

 ஜப்பான் நாடு சின்னாபின்னமாகும்.. சீன அரசு பகிரங்க எச்சரிக்கை..!! சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.   இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது.  இதற்கு மில்லியன் கணக்கான சீன மக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். எனினும் இணையதளத்திலிருந்து இந்த காணொளி சில பிரச்சனைகளால் நீக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சீனாவின் அதிகாரிகள் அதே காணொளியை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

TAMIL Eelam news b134

 கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஈழத்தமிழரின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகவும் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூர தடை உத்தரவு வழங்கி நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது. சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பின், ஒரு குழுவினருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு குழுவினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிசார் மன்றுக்கு தெரிவித்தனர். பொலிசாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் மூதூர் நீதவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத்தலைவர் வேதநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசபிள்ளை குகன், உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவுகளை வழங்கினார். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார் - காயப்ப

TAMIL Eelam news b133

 யாழில் சிறீலங்கா புலாநாய்வாளர்கள் அட்டகாசம் யாழில் மீண்டும் ஒரு வாள்வெட்டு சம்பவம்: பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி யாழ்.காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடி குழுவினர் சிலர் தீமுட்டியுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை நிலவி வருகின்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  கடை உரிமையாளரும் அவரது மனைவியும் மனைவியாரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடை முன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்டியதுடன் கடை உரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வீச முற்பட்டுள்ளனர். இருப்பினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார். அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவத்தால் கொக்குவில் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து

TAMIL Eelam news b132

 யாழ்ப்பாணத்தில் சிங்கள புலநாய்கள்  அட்டகாசம்! விரக்தியில் வெட்டப்பட்ட தாய், தந்தையர் யாழ். இணுவில் காரைக்கால் பகுதியில் (வாள்வெட்டு) வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகனைத் தேடி வந்த கும்பல் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு   தப்பித்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

TAMIL Eelam news b131

 கிழக்கு பல்கலைக்கழகம் படைத்த மகத்தான சாதனை! இணைய வழியாக இன்று (20) இடம்பெற்ற மருத்துவ பீடங்களுக்கான அகில இலங்கை வினாவிடை போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் இறுதி சுற்றில் கொழும்பு மருத்துவ பீடத்தை எதிர் கொண்டு 10க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிவாகை சூடியது , தகுதிகாண் சுற்றில் இரு பீடங்களும் சம புள்ளிகளை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது. இப்போட்டியானது முதற்தடவையாக இலங்கை நரம்பியல் சங்கத்தால் நடாத்தப்பட்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. இது zoom வழி போட்டியாக இடம்பெற்றது. இப்போட்டிக்கு மாணவர்களை Dr.அஜினி அரசலிங்கம், Dr.மயூரன் , Dr.றோஷினி ஆகியோர் தயார்படுத்தியதுடன் எமது பீடமும் பீடாதிபதியும் நிர்வாக ரீதியாக சகல ஆதரவையும் வழங்கி இருந்தது. இப்போட்டியில் சி.லலின்ஷன் ஆர்.அபினயா பாத்திமா லூதா ஏ.எம்.அகீல் டி.தனுஷ்காந்த் பி.தயானி ஆகியோர் பங்குபற்றி இப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்திருந்தனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

TAMIL Eelam news b130

 பாலியல் நடத்தைகளை ஊக்கப்படுத்தும் சிங்கள அரசு கண்டும் காணமலும் பார்த்துக் கொண்டுயிருக்கும்  பொலிஸ் அதிகாரிகள் 13 வயது தமிழ் சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் நாவலப்பிட்டியில் 13 வயதான தமிழ்ச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10 இடங்களை அடையாளம் காண்டுள்ளனர். சிறுமி 6 முதல் 7 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாவலப்பிட்டி, ஹரங்கல இலுக்தென்ன பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளியானது. 42 வயதான திருமணமான ஆசாமியொருவர் சிறுமியை அழைத்துச் சென்று, கற்குகை ஒன்றுக்குள் 4 நாட்களாக தடுத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டான். இதன்போது, வேறு பல நபர்களாலும் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத