முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 878

 தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் -மனோ கணேசன் தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது என சீன தூதரகம் எனக்கு தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்து பார்த்தால், தமிழ் மொழியை புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகிறது. சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பை கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழி சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கிறார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடந்த “சட்டமா” குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீன தூதரகமா? இலங்கை அரசா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை-சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழி போராட்டத்தை கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகிறேன் என தமி

TAMIL Eelam news 877

                                                 தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த “தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ படைத்துறை வரைபடத் தளபதி ”  பிரிகேடியர் சசிகுமார் அவர்கள் . ஆண்டுகள் பத்து. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட

TAMIL Eelam news 876

 அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர் அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்து பெயரை கேட்டவுடன் சிங்களன் சிறுநீர் கழித்தான் என்றால் அது பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவாகதான் இருக்கமுடியும் ,உலக இராணுவ வல்லுநர்களால் புலிகளால் ஒருகாலமும் கைப்பற்ற முடியாது என்று கணிக்கப்பட்ட ஆணையிறவு படைத்தளத்தை கைப்பற்ற தாக்குதல் திட்டம் தலைவரால் வகுகக்கப்படுகிறது  திட்டத்தை செயல்படுத்தி படையை வழிநடத்த தலைவர் அவர்களால் பால்ராஜ் அண்ணா நியமிக்கப்படுகிறார் சண்டை தொடங்கி இருபுறமும் தாக்குதல் உக்கிரமாக நடந்துகொண்டு இருக்கின்றது கொழும்பில் சிங்கள ராணுவ உயர்மட்டதில் இருந்து போரை வழிநடத்தும் சிங்கள ராணுவ மேஜருக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது  அந்த உரையாடல் இவ்வாறாக நடக்கின்றது 20,000 ஆமியை வைத்துக்கொண்டு வெறும் 2,000க்கு குறைவான புலிகளை உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லையா நீ யெல்லாம் என்ன ——க்கு ராணுவத்துக்கு வந்தே என்று அதற்கு அந்த களமுனை மேஜர் சொல்லுகிறார் புலிகளின் தாக்குதலை முன்னின்று வழிநடத்துவது பிரபாகரன் என்றால் கூட நாம் பிழைத்துக்கொள்ள சிறுதுளியோனும் வாய்பிருக்கின்றது  ஆனால் சண்டை களத்தில் நிற்பது பால்ராஜ் அவன் வந்து உட்காந

TAMIL Eelam news 875

 ரெஜினாவுக்கு இத செஞ்சா மட்டும் பிடிக்காதாம்.. இந்த மாதிரி பசங்களை தான் ரொம்ப பிடிக்குமாம்! கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் பிரபலமானார் அதற்கு காரணம் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.   தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வந்த ரெஜினா அதன் பிறகு தமிழிலும் எப்படியாவது நிரந்தரமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என நினைத்து மாநகரம் போன்ற ஒருசில கதையம்சம் உள்ள படங்களில் நடித்தார்.   எப்போதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினாவிடம் ரசிகர்கள் பல கேள்வி கேட்பது வழக்கம். அதே போல் அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.  தற்போது ரெஜினாவிற்கு இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது என அவரது நம்பகத்தன்மை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கல்லா கட்டி வரும் நடிகைகளில் ரெஜினா ஒரு முக்கியமானவர். இவருக்கு ஈகோ உள்ள பசங்களை சுத்தமாக பிடிக்காதாம். அதேசமயம் உண்மையும் நேர்மையும் உள்ள 

TAMIL Eelam news 874

 கொரோனா: இந்தியாவிலிருந்து மேலும் 165 பேர் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டனர்! இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையின்கீழ், இரண்டாவது தொகுதி ஆஸ்திரேலியர்கள் சிறப்பு விமானம் மூலம் டார்வினை வந்தடைந்துள்ளனர். கடந்த வாரம் முதற்கட்டமாக சுமார் 78 பேர் சிறப்பு விமானம் மூலம் டார்வின் அழைத்துவரப்பட்டிருந்தநிலையில் இன்று இரண்டாவது விமானம் மூலம் சுமார் 165 பயணிகள் டார்வின் RAAF base-ஐ வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக Howard Springs தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களில் 165 பேரை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் ஆஸ்திரேலியா வந்தடைந்தது. திட்டமிட்டபடி அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர், எவரும் திருப்பி அனுப்பப்டவில்லை. இந்தியாவிலிருந்து மேலும் பல ஆஸ்திரேலியர்கள் ஜுன் 4ம் திகதிக்கு முன்னர் ஆஸ்திரேலியா வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சிறப்பு விமானத்தி

TAMIL Eelam news 873

 கோவிட் பேரிடர் கால நிதியாக ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு 55 லட்சம் டொலர்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். இந்து சமூத்திர பிராந்திய நாடுகளில் பரவலடைந்துள்ள கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. படகுப் பயணங்களை முறியடிப்பதற்கு இலங்கைக்கு ட்ரோன்களை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா! கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு ஆஸ்திரேலியா புதிதாக அறிவித்துள்ள 55 லட்சம் டொலர்களுடன் மொத்தம் ஒரு கோடி 17 லட்சம் டொலர்களை வழங்கியுள்ளது. கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை அதனை எதிர்த்து போராடி பாதுகாப்பான சூழலை மீளக்கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த புதிய நிதி அதன் ஒரு அங்கமே எனவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் David Holly தெரிவித்துள்ளார். இதுதவிர நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய அரசு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் டொலர்களை கோவிட் ப

TAMIL Eelam news 872

 தமிழருக்கு தனி ஈழத்தை வழங்க எதிர்ப்பது ஏன்?? கேட்கிறார் ராஜித  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. மாறாக தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே எதிர்க்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தமிழ் ஈழத்திற்கும் நாடு பிளவடைவதற்கும் எதிரானவர்கள் என்று பாரியளவில் கூச்சலிட்டவர்கள் தான் இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றல்லவா கூறினார்கள்? இன்று ஒரே நாடு ஒரே சட்டம் எங்கிருக்கிறது ? இந்த வலயத்திற்கு ஒரு நீதியும் எமது வலயத்திற்கு ஒரு நீதியுமே காணப்படுகிறது. இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சமஷ்டி அதிகாரத்தை விட அதிகமானதாகும். இந்த வலயம் தனி இராச்சியமொன்றாகும். இது தனி ஈழமாகும். இதனை தனி ஈழமாகக் குறிப்பிடுவதற்கு தற்ப