முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 464

 ஜெனிவா தீர்மானத்தை அமுல்படுத்த எவரும் கட்டாயப்படுத்த முடியாது - சரத்வீரசேகர இறுமாப்பு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது இலங்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் யு.என்.எச்.ஆர்.சி யின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கைக்கு கட்டாயமில்லை என்றும் அதை கட்டாயப்படுத்த மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது யு.என்.எச்.ஆர்.சியின் தீர்மானம் 30/1 ற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதாக வீரசேகர தெரிவித்தார்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தீர்மானத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதால் யு.என்.எச்.ஆர்.சி அத்தகைய அழுத்தத்தை செலுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று (28) நடைபெற்ற நிகழ்வின்போது போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை சமர்ப்பித்த நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 25 நாடுகளின் ஆதரைவப் பெறத் தவறிவிட்டதாகவும், அதன்படி தீர்மானம் பெரும்பான்மையான உறு

TAMIL Eelam news 463

 ஐக்கி நாடுகள் சவையினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக 22 நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானதிற்குப்பின்னர், சிறிலங்கா புலநாய்களால் தாயககத்தில் பிரசித்திபெற்ற கிட்டு பூங்கா தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு புலநாய்களால் எமது உறவுகளிற்கு தெரியாதவாறு திட்டமிட்டு தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டு யிருந்தவேளை இந்த அரச பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடிகாலை இதை பார்த்த மக்கள் குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் முதியவர்கள் மற்றும்அங்கே தொடர்ந்து சென்று வருவபர்கள் கடுகையாக கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகவும் தற்பொழுது தங்களால் வரமுடியாது என சொல்லப்பட்டதாகவும் இது முன்கூட்டிய இராணுவத்தால் போகவேண்டாம் என இராணுவ அதிகாரியால் சொல்லப்பட்டுயிருக்கலாம் என புத்திஜீவிகள் கருதுகின்றார்கள்.  அதனால் நல்லூர் கிட்டு பூங்கா

TAMIL Eelam news 462

 இறுகுகிறது பிடி - இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவில் புதிய செயலகம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை செயல்படுத்த சிறப்பு அலுவலகம் அமைக்க மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் முடிவு செய்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பண்டைய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிப்பதும், நாட்டில் தற்போதைய மனித உரிமை பிரச்சினைகளை கண்காணிப்பதும் இதன் முக்கிய நோக்கம். ஜெனீவா வட்டாரங்களின்படி, இதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து மீறப்படுமானால் , ஏதாவது ஒரு நாடு அதற்கு எதிராக வழக்கு தொடுக்க தேவையான ஆதாரங்களை தேடி வழங்க இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலகம் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும். உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும். இதன் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்ப

TAMIL Eelam news 461

 மீண்டும் பிரிவினைவாதத்தை கொண்டு வரத் தயாரில்லை - ஜனாதிபதி திட்டவட்டம் அதிகார பரவலாக்கல் மூலம் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதத்தை கொண்டு வர பலம்மிக்க நாடுகள் முயற்சித்து வருகிறது. அந்த நாடுகளின் பூகோள அரசியல் தேவையை நிறைவேற்றி நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தான் எந்த வகையிலும் தயாரில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை பிட்டபெத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவம் குறைந்தன் காரணமாகவும் சரியான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும் இப்படியான சம்பவம் நடந்தது என ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அனைத்து பக்கங்களிலும் உள்ளன. அடிப்படையாக தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது. அடுத்ததாக சர்வதேசத்திற்கு சென்று ஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கி எமது நாட்டின் இறையாண்மை சுதந்திரத்தை முற்றாக இல்லாமல் செய்தனர். நாங்கள் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகினோம். இதனால், அவர்கள் எமக்கு எதிராக

TAMIL Eelam news 460

 மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான இவர்,  பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் இயற்கை எய்தினார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் சேதுராமன் மறைந்து ஒரு வருடம் ஆனதையொட்டி அவரது மனைவி உமா சமூக வலைத்தள பக்கத்தில், “மா…அப்படிதான் நான் எப்போதும் உங்களை அன்பாக அழைத்திருக்கிறேன். இதுவரை உங்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஏனென்றால் எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் இருப்பதற்காக நான் உங்களை நேசிக்கிறேன்,  மதிக்கிறேன். என்னைச் சுற்றி இருந்தது, நீங்கள் மட்டுமே. மீட்டிங், பயணங்கள், தினசரி நோயாளி அட்டவணை, பயிற்சி அமர்வுகள், உணவு, ஓய்வு என 4 ஆண்டுகளில் நான் எப்போதும் உங்களுக்க

TAMIL Eelam news 459

 மைத்திரி பெருமையோடு சொல்லும் விடயம் -வெளிப்படுத்திய சுமந்திரன் இன்றைய காலகட்டத்தில் ஊடகம் மிக மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. இன்றைக்கு விசேடமாக இந்த அரசாங்கத்தின் கீழே துணிவோடு உண்மையை எடுத்துச் சொல்கின்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றது. ஊடக சுதந்திரம் திரும்பவும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் எப்படியாக இருந்தது என்று 2015ம் ஆண்டுக்கு முன்னர் எங்களுக்குத் தெரிந்திருந்தது. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், இன்னும் பலர் நாட்டை விட்டு ஓடினார்கள். இன்றைக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெருமையோடு சொல்லுகினற விடயம் அவருடைய காலத்தில் எந்த ஊடகவியலாளரும் தாக்கப்படவில்லை என்பதாகும். அதை அவர் பெருமையாகச் சொல்லும் அளவிற்கு உண்மையும் இருக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றைய தினம் கல்முனையில் இடம்பெற்ற பரிணாமம் என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மே

TAMIL Eelam news458

 .தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்தாதீர் -ஜேர்மன் அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ஜேர்மனிக்கு பெருமளவில் சென்று அடைக்கலம் கோரியுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடுகடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மார்ச் 30 ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜேர்மனி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைமனித உர