முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 274

  குமுதினி படகு படுகொலை..! முதினி படகு படுகொலை..! 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத  ஈரநினைவு நாள் இன்று . நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது. குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேத

TAMIL Eelam news 273

 5 லட்சம் கடந்த உயிரிழப்பு – வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்   அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் 3 போர்களில் பலியானோர் எண்ணிக்கையைவிட அதிகமாகும். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் பேரும், கொரியப் போரில் 36 ஆயிரம் பேரும் பலியாகினர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 5 லட்சம் பேர் பலியானதையொட்டி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்திகளை ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாப் ஆகியோரும் கொரோனாவில் இறந்தவர்களுக்காக

TAMIL Eelam news 272

 இறுதிவரை ஒருபுலி உயிரோடு இருக்கும்வரை… தமிழன்கை போராடும்..! சோறு கிடைக்கும் இடத்தில்  சுருண்டு படுப்பதற்கு  நாயல்ல நாம்… வீறு குலையாத  தமிழன் பரம்பரையில் வந்த  வீரத்தமிழர்கள்..தமிழ் ஈழத்தமிழர்கள்…நாமடா..! ஆறுபடையுடன் போரை நடாத்தியே அந்நியச் சிங்களவன் கால்கள்.. தமிழ்மண்ணில்.. அடியெடுத்து  வைத்தபோதெல்லாம் கூறு ..கூறாய் வெட்டிச்சரித்த  வீரப் பிரபாவின்  தீரப்படையணி நாமடா..! சேறு மிதிப்பது போலவர்  குருதியில் குளித்து  பலகாலம் தமிழரின்  வீர வரலாற்றை.. எழுதிய வேங்கைகள் நாமடா..! ஆறும்.. ஆறுமடா ..வன்னியில்  விழுந்தநம்  காயம் ஆறுமடா..! தமிழ்  புலியின் காயம் ஆறிட… போரில் புதுநெறி வகுத்துநாம் புறப்படும் போதிங்கே  நரிகளின்… வாலில் திரியினைக் கொழுத்திநாம் விரட்டி அடிப்பது உறுதியடா…! நாயென…நரியென  வாழ்ந்திடும் வாழ்வொரு வாழ்வா..? ஈழத்.. தாயெமை வீரப்பால் ஊட்டித்தான்  வளர்த்தவள்… என்பதை அறியாயோ..? வாய்மையும் வீரமும்  நம்முடன் கூடவே வந்து பிறந்தவை..என்பதை  அறியாத சிங்களவன்  காயுடன் பிஞ்சினை.. பூவினை அழித்தது கலங்கிநாம் அழுவதற்கல்ல..மீண்டும்  துலங்கி நாம் எழுவதற்கு … என்றறி தம்பி..! இழந்தது அதிகம்தான்… இ

TAMIL Eelam news 271

 போரில் உயிர் பிழைத்தோர் வாழ்க்கை நிர்மூலம் ஆகியுள்ளது- ஐ.நா இலங்கை மீது கடும் காட்டம் ! இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட்.   “எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்திருக்கிறது,” என்று மீஷெல் பேச்சலெட் கூறினார். 2015ஆம் ஆண்டில், மனித உரிமை மீறல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்த பிறகும், தற்போதைய அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களை போலவே, உண்மையை கண்டறியவும் குற்றங்களுக்கு பொறுப்புடைமையாக்கும் நடவடிக்கையிலு

TAMIL Eelam news 270

 சீரியல் நடிகை ஆயிஷா உடை மாற்றும் போது உள்ளே புகுந்த இயக்குனர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி! ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆயிஷா துணி மாற்றிக் கொண்டிருக்கும் போது அந்த சீரியலின் இயக்குநர் அவரது அறைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நடிகைகள் தங்களுடைய ரசிகர்களின் பார்வை தன்மேல் இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வபோது சமூக வலைதளங்களில் தான் பட்ட கஷ்டங்களை கூறி அனுதாபங்களை தேடிக் கொள்வார்கள். பெரும்பாலும் அப்படி செய்தவர்களுக்கு இதுவரை பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஏன் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகைகள் கூட இந்த மாதிரி உத்திகளை பயன்படுத்தி பார்த்து விட்டனர். அந்த வகையில் தற்போது சினிமாவுக்கு போக துடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நாயகி ஆயிஷா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் திருமண காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அப்போது திருமண சேலை கட்டுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலானதாக குறிப்பிட்டுள்ளார் ஆயிஷ

TAMIL Eelam news 269

 தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்…!!! 1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்…!!! ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் முன்னிலையில் அணிவகுத்து காட்டி தம் கடமையை கையில் எடுத்த உன்னதமான நாள் ஆகும். மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்

TAMIL Eelam news 268

 மியான்மர் மக்களுக்கு அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்கிறது அமெரிக்கா- ராணுவம் கடுப்பில் மியான்மர் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று அந்நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் கூறும்போது, ”நாங்கள் மியான்மர் மீது கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம். மியான்மர் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின் வாங்க மாட்டோம். மியான்மர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள். ஜனநாயக அரசை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்றார். மேலும் மியான்மர் ராணுவத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேர் மீது திங்கட்கிழமை அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது.மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. போரட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.மியான்மர் ராணுவத்தின் இத்தாக்குதலை ஐ. நா.,பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கட