முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 186

 அன்பான தமிழீழ மக்களே..! என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்.. அன்பான தமிழீழ மக்களே..! என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்.. மீள்பதிவு புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து தமிழகத்தில் இருந்து விமர்சனக் கடிதம்” ஒரு மாவீராங்கனையின் தாய் எழுதும் திறனாய்வு மடல்.. கண்டிப்பாக படிக்க வேண்டிய கருத்துள்ள கடிதம்… சென்னை நாள் 27.01.2011 அன்புடன் திரு.துரை அவர்களுக்கு, முதலில் உளமார்ந்த நல்லாசிகள் பாராட்டுதல் கலந்த நல் வாழ்த்துக்கள். புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற புத்தகத்தைப் படித்தேன். படித்தல் நிறைவுறும் முன்பாகவே அது வெறும் புத்தகமல்ல.. ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குமான பொக்கிஷம் என்பதை உணர்ந்தேன். உணர்ந்தவண்ணமே அந்தப் பதினெட்டு நாட்களின் பயணத்தை நிறைவு செய்தேன். இந்தப் புத்தகத்தை அல்ல.. பொக்கிஷத்தை அறிமுகம் செய்தமைக்காக சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலாகக் கூற வேண்டும். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவர

TAMIL Eelam news185

 அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் தாங்கமுடியாத விடயம்………….. இந்நிலையில் எனக்கு அமைதி எங்கே? உள்ளத்தில் அமைதியாக இருப்பதுதான் பெரிய கொடை. அதுதான் உண்மையான அழகு. ஆனால் வெறும் புற அழகுகள் எப்படி அமைதியைக் கொடுக்கமுடியும். ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், இறக்கின்றான், ஆனால் அவன் மனித குலத்திற்கு ஆற்றும் சேவைதான் நிலைத்திருக்கின்றது. உன்னால் முடிந்தவரை சேவைசெய். பொழுதுகளை வீணே கழிக்காதே. மேலும், சுயநலமும் குறுகிய பிற்போக்குச் சிந்தனையும் கொண்ட வட்டத்தில்தான் நீர் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர். ஆனால் இவற்றைக்கண்டு இவர்களின் மாயைக்குள் சிக்குண்டு விடாதே. கவனமாயிரு, ஆழ்ந்து சிந்தி. அங்கு பலர் நுனிப்புல் மேயும் ஆடுகளைப் போல் எதையும் ஆழ்ந்து பாராமல், வெறும் சித்தாந்தங்களைப் படித்துவிட்டு வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். “நான்கு குருடர்கள் யானையைப் பார்த்தது போல்”தான் இவர்கள் விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதும். எதையும் எல்லோர

TAMIL Eelam news 184

 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி! 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.  இந்த முன்மொழிவினை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பயிற்சி மக்கள் தமது சொந்த காலில் நிற்கவும் தலைமைத்துவ குணங்களை ஊக்குவிக்கவும் ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் நாட்டிற்கு பங்களிக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடைமுறைகள் பல நாடுகளுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவியுள்ளதுடன், இது இளைஞர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தமிழர்களை இலக்கு வைத்தே தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்டாய இராணுவப் பயிற்சி என்ற போர்வையில் வலுக்கட்டாயமாக அவர்களைப்பிடித்து பயிற்சி கொடுத்து அடுமைகளாக வைத்துயிருப்பது. மற்றது எமது விடுதலை உணர்வை முற்றாக அளிப்பது ஆண் பெண் இருபாலருக்கும் இடைய பாலியில் உணர்வை ஊட்டுவது என

TAMIL Eelam news 183

 யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் தூபியை இடித்த போது பிக்பாஸ் லொஸ்லியா என்ன செய்தார் தெரியுமா? கிளிநொச்சியில் பிறந்து, திருகோணமலையில் வளர்ந்து, கொழும்பில் வேலை செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் போனவர் லொஸ்லியா., கடந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய லொஸ்லியாவிற்கு உலகம் பூராகவுள்ள இலங்கை தமிழர்கள் ஆதரவளித்தனர், ஈழத்து பெண் என்ற காரணத்தினால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இவருக்கு தனி மரியாதையிருந்தது, ஈழத்து பெண் என்ற காரணத்தினால் இவர் விடும் சில தவறுகளையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களும் லொஸ்லியாவை நேசித்தனர். இப்படி ஈழம் மண்ணையும், ஈழ வரலாற்றையும், ஈழத்தமிழர்களின் ஆதரவையும் பக்கபலமாக கொண்டு புகழ் பெற்றிருக்கும் லொஸ்லியா இந்த ஈழ மண்ணுக்காகவும், ஈழ மக்களுக்காகவும் எதையும் செய்யவில்லை, அதைக்கூட நாம் பொறுத்துக்கொண்டிருந்தோம். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதமிருந்தனர், அரசியல் தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர், இந்தியாவில் தமிழக முதலமைச்சர் உட்பட்

TAMIL Eelam news 182

முள்ளிவாய்க்கால் தூபி தகர்ப்பின் உண்மையான பின்னணி குறித்து வெளியானது ?  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பதற்கான பின்னனி என்ன இதற்கு யார் காரணம் என்பது வெளியாகி உள்ளது. அதாவது யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பிற்கான காரணம்,பல்வேறு கருத்தரங்குகளில் இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர்,சந்திக்கும் போதும் அவர்கள் எழுப்பிய முதலாவது விடயமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விடயமே இருந்துள்ளதாக சண்டே டைம்ஸ் எனும் ஆங்கிலப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 8ம் திகதி இரவோடு இரவாக தகர்க்கப்பட்ட செய்தியறிந்த இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அதுதொடர்பாக கடுமையான கரிசனையை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி ஆங்கிலப்பத்திரிகை சண்டே டைம்ஸ் அதன் அரசியல்பத்தியில் குறிப்

TAMIL Eelam news 181

 பெரும்பாலான இந்தியர்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால்  இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. இந்தியா கலாச்சார ரீதியாக தெளிவானது மற்றும் வித்தியாசமானது என்றாலும், நாட்டின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் உணவு ஆர்வலர்களை ஒன்றிணைக்க அறியப்பட்ட சில விஷயங்களில் புளி ஒன்றாகும்.   இது இந்தியில் ‘இம்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சுவையை விட, புளி பல ஆரோக்கிய நன்மைகளால் விரும்பப்படுகிறது. இது ஏற்கனவே உங்கள் சமையலறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், இதனை உடனடியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில காரணங்கள் இங்கே உள்ளன. மேலும் புளி அதன் சாறு வடிவில் உட்கொள்ள வேண்டும். * இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, செரிமான அமைப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் அதை உட்கொள்ள வேண்டும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, செரிமானம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அஜீரணம், மலச்சிக்கல், பிடிப்புகள் மற்றும் / அல்லது வீக்கத்திற்கு, புளி சாறு லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இது உங்களுக்கு உதவும்.. * சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளி சாறு ஏற்றது. முன்னர் குறிப

TAMIL Eelam news 180

 கிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன் – தமிழீழத் தேசியத் தலைவர் -மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரு இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை ஒருவர் ஆழமாக இனம்கண்ட புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது. அவனுள் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்; போராடினான்; அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க்களத்தில்