முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 870 பணத்திற்காக பொய்களை சட்டமாக்கும் மனிதர்கள்?

 

ஐரோப்பிய வாழ் தம்பதிக்கு சினிமா பாணியில் யாழில் நடந்த சம்பவம் ; தாயகம் வந்த மனைவி திகைப்பு!


ஐரோப்பிய வாழ் தம்பதிக்கு சினிமா பாணியில் யாழில் நடந்த சம்பவம் ; தாயகம் வந்த மனைவி திகைப்பு! | Movie Style Tamil Diaspora Couple Divorce Jaffna
 By Sulokshi 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் தம்பதியின யாழ்ப்பாணத்தில் ஆள் மாறாட்டம் செய்து விவாகரத்து பெற்றுக்கொடுத்த சம்பவம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வரும் நிலையில் , சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.


ஆள் மாறாட்டம் செய்து  விவாகரத்து

இந்நிலையில் கணவன், சாவகச்சேரி பகுதியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்றமையால், யாழில் விவாகரத்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்.

யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த அதிர்ச்சி; அற்றோனிக் பவர் கொடுப்பவர்கள் அவதானம்!

யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த அதிர்ச்சி; அற்றோனிக் பவர் கொடுப்பவர்கள் அவதானம்!

சகோதரனின் கோரிக்கையை ஏற்று யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவரை நாடிய சகோதரி விடயத்தை கூறியுள்ளார்.

அதனை அடுத்து சட்டத்தரணி , தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் இருவரை கணவனுக்கு ஒருவரையும் , மனைவிக்கு ஒருவரையும் நியமித்து சாவகச்சேரி நீதிமன்றில் விவகாரத்திற்கு விண்ணப்பித்து, வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து , நாட்டில் இல்லாத இருவருக்கும் விவாகரத்து பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஐரோப்பிய வாழ் தம்பதிக்கு சினிமா பாணியில் யாழில் நடந்த சம்பவம் ; தாயகம் வந்த மனைவி திகைப்பு! | Movie Style Tamil Diaspora Couple Divorce Jaffna

விவாகரத்து பெற்று சில காலத்தின் பின்னர் , இத்தாலியில் வசித்து வந்த பெண் , யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். பெண், சட்டத்தரணி ஊடாக தனக்கு விவாகரத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதே தனக்கு ஏற்கனவே விவாகரத்து கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக முரளிதரன் நியமனம்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக முரளிதரன் நியமனம்

சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணை

அதிர்ச்சியடைந்த பெண் நாட்டில் இல்லாத தனக்கு , தன்னுடைய சம்மதம் எதுவும் பெறப்படாத நிலையில் எவ்வாறு விவாகரத்து வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய வாழ் தம்பதிக்கு சினிமா பாணியில் யாழில் நடந்த சம்பவம் ; தாயகம் வந்த மனைவி திகைப்பு! | Movie Style Tamil Diaspora Couple Divorce Jaffna

மேலும் விவாகரத்து நடவடிக்கையை முன்னெடுத்த சட்டத்தரணியின் அலுவலகத்தை சோதனையிட நீதிமன்ற அனுமதி பெற்ற பொலிஸார் அலுவலகத்தினை சோதனையிட்டதுடன் ,கணனி உள்ளிட்டவையுடன் அலுவலகத்தில் உள்ள கோப்புக்களையும் சோதனையிட்டனர்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?