By Shankar
1 மணி நேரம் முன்
Follow us on Google News
விளம்பரம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (05-11-2023) இடம்பெற்றுள்ளது.
யாழில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் வெளியான தகவல்! | Man Was Found Dead Body In Private Hotel In Jaffna
இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் தென்னிலங்கையை சேர்ந்த 61 வயதுடைய லால் பெரேரா என்கிற சிங்களவர் என தெரியவந்துள்ளது.
குறித்த விடுதியில் 3 நாட்களாக தங்கி இருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் வெளியான தகவல்! | Man Was Found Dead Body In Private Hotel In Jaffna
அந்த விடுதி உரிமையாளரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்