யாழில் அதிகரித்து வரும் வழிப்பறிக் கொள்ளைச் சம்வங்கள்;சிசிரிவியில் பதிவான காட்சி

By Kirushanthi 48 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
சண்டிலிப்பாய் - சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரைநகர்- யாழ்ப்பாணம் முதன்மை வீதியில் சங்கானைக்கும் சண்டிலிப்பாய்க்கும் இடையே வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.
கடந்த (02.11.2023) முச்சக்கர வண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கிவிட்டு கழுத்திலிருந்த சங்கிலியை அபகரித்துத் தப்பித்துள்ளனர்.
வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்கு சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளங்களை வழங்கிய போதும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்