e 455 தமிழீழப்குதியில் இளைஞர்களை அழிக்கும் திட்டத்தில் ஐம்பது வீதம் வெற்றி பேர் குறிப்பட விரும்பாத இலங்கை அதிகாரி தெரிவிப்பு?
எங்கே போகிறது யாழ்ப்பாணம்...!

தமிழர்களுக்கான உரிமைப்போராட்டத்திற்கான ஆயுதவழி போராட்டம் நசுக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமது இளம் சந்ததி தறிகெட்டு அலைந்து திரிவதும் அவர்களை திட்டமிட்ட ஒரு குழு அதற்குள் விழுத்துவதும் தெட்டத் தெளிவான நிதர்சனம்.
இளம் சந்ததியை இப்படியே விட்டால் அவர்கள் மீண்டும் உரிமைப்போராட்டம் அது இது என வெளிக்கிட்டுவிடுவார்கள் என அவர்களை அதற்குள் சிறைப்படுத்தும் வேலை கன கச்சிதமாக அரங்கேறிவருகிறது.
ஆனால் இதனை ஏனோ எமது இளம் சந்ததி புரியாமல் அந்த மாயவலைக்குள் தாமாகவே போய் சிக்கிக் கொள்ளிகிறது என்பதுவே புரியாத புதிராக உள்ளது.
போதைப்பொருளை விநியோகிக்கும் மையமாக யாழ்ப்பாணம்
இன்று இலங்கைத்தீவிற்கே போதைப்பொருளை விநியோகிக்கும் மையமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது. நாளாந்தம் கிலோக்கணக்கில் கடற்பரப்பிலும் வேறு சில இடங்களிலும் கைப்பற்றப்படும் கஞ்சா அதற்கு சான்று.
இவ்வாறான நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாகவே பிரபல ஹோட்டல் ஒன்றில் இளைஞர்களையும் யுவதிகளையும் குறிவைத்து போதை விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது நடந்தும் முடிந்துள்ளது.
இளைஞர்களுக்கு ரூபா 1500 எனவும் யுவதிகளுக்கு ரூபா1000 எனவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு அந்த போதை விருந்து நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் போதை விருந்து
இதில் பஙகேற்றவர்கள் மதுவுக்கு அடிமையாகி பின்னர் தாம் இரகசியமாக கொண்டு சென்ற போதைப்பொருட்களை பரகசியமாக அங்கே உண்டு போதை தலைக்கேறி குத்தாட்டம் போட்டுள்ளனர்.
தென்பகுதியில் அரங்கேறும் இவ்வாறான செயற்பாடுகள் தற்போது யாழ்ப்பாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது எதிர்காலத்திலும் இவ்வாறான போதை விருந்துகள் கட்டண அறவீட்டுடன் மேற்கொள்ளப்படப்போகின்றது என்பதற்கான முன்னறிவிப்பே ஆகும்.
எனவே எமது இளம் சந்ததி எங்கே செல்கிறது..! இதனை தடுத்து நிறுத்தப்போவது யார்..! விடைகாணாத வினாக்கள் ஏராளம்..
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்