முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 44 பாதுகாப்பைத் தேடி தொடரும் பயணம்

பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! வெளியாகிய தகவல்
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு படகு வழியாக தப்பிச் சென்ற இலங்கையர்கள், தற்போதே பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ள போதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு மூலம் பிரான்ஸின் ரீயூனியன் தீவை 46 பேர் அடங்கிய குழுவொன்று சென்றடைந்தது. இவர்களை உள்வாங்கிய பிரெஞ்சு அதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பல்வேறு பகுதிகளில் தங்க வைத்துள்ளனர். நிர்வாகத் தடுப்புக்காவலில் இலங்கையர்கள் பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! வெளியாகிய தகவல் | 46 Sri Lankans Escaped By Boat To France 46 பேரில் சிலர் ரீயூனியன் தீவிலும் சிலர் சென்ரெனிஸிலுள்ள ஹோட்டல் ஒன்றிலும் சிலர் அகதிகள் காத்திருப்புப் பகுதியிலும் நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது புகலிட கோரிக்கை தொடர்பில் சென்ரெனிஸிலுள்ள நீதிமன்றத்திற்கு தொடர்ந்தும் செல்வதனையும் வருவதனையுமே செயற்பாடாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் நிர்வாகக் காவலை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை சந்தித்த சர்வதேச மன்னிப்பு சபை பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. விடுதியில் பொதுவான அறையில் நான்கு இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். “இலங்கையில் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. ரீயூனியனில், நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "நான் இலங்கையில் இருந்தால் நான் இறந்துவிடுவேன்" என மற்றொருவர் கூறியுள்ளார். ஆபத்தான சூழ்நிலையில் இலங்கையர்கள் பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! வெளியாகிய தகவல் | 46 Sri Lankans Escaped By Boat To France எனினும் அகதிகளுக்கான காத்திருப்பு வலயத்தில், புலம்பெயர்ந்தோர் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 பேர் ஒரு அறையில் உள்ளனர். 5 நிமிடங்கள் கூட வெளியே செல்ல முடியாது. உறங்கவும் மலசலகூடத்திற்கு செல்லவும் மாத்திரமே முடியும். சிறையில் வாழும் ஒரு வாழ்க்கையை வாழ்கின்றார்கள். நாள் ஒன்றுக்குள் 15 நிமிடங்களுக்கு மேல் அவர்களால் சூரியனைக் கூட பார்க்க முடியாத நிலை. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்த 46 பேரில் இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு பிள்ளைகள் மற்றொரு காத்திருப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், பத்திரிகையாளர்கள் எவரையும் காத்திருக்கும் பகுதிக்குச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களே கடினமான சூழ்நிலைகளில் உள்ள நிலையில் சிறுவர்களுக்கு இது இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என சர்வதேச மன்னிப்பு சபை உறுப்பினர்களில் ஒருவரான கந்தசாமி பிள்ளை தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?