துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியங்களின் கண்ணீர் சுமந்த கதைகள்! (VIDEO)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகளும், போராளி குடும்பங்களும் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு நாட்டிற்காக போராடிய எத்தனையோ போராளிகள் இன்று வறுமையின் பிடியில் சிக்கி நாளுக்கு நாள் போராட்டத்துடன் தனது வாழ் நாளை கழித்து வருகின்றனர்.
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவ்வாறு வலி சுமந்த சில குடும்பங்களின் துயரங்களுடன் நாம் இதுவரை கடந்து வந்த பாதையை தாங்கி வருகிறது எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் உதவும் உள்ளம் கொண்டவர்கள் உங்கள் ஆதரவு கரங்களை நீட்டலாம்.. WhatsApp / Viber - +94767776363 / +94212030600
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்