அன்றே இந்தியாவுடன் இணைந்திருந்தால் இன்று எரிபொருள் வரிசை இருந்திருக்காது : நாடாளுமன்றத்தில் ரணில்..
ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஆற்றிவரும் கொள்கை உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும். என்றார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்