ஒரே பாலினம் உள்ளவர்களை தங்களின் விட்டிற்கு எடுப்படும் பிரச்சனைகள் ஏராளம் எனவே குழந்தைகள் முதியவர்களைத்தவிர இப்படியானவர்களை விட்டிற்கு எடுப்பதைத் தவிர்க்கவும்.
தமிழர் பகுதியில் மனைவியின் அறைக்குச் சென்ற கணவனின் நண்பரால் ஏற்பட்ட விபரீதம்
மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் செய்து உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3 ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
தமிழர் பகுதியில் மனைவியின் அறைக்குச் சென்ற கணவனின் நண்பரால் ஏற்பட்ட விபரீதம் | Husband S Friend Went To His Wife S Room Drunk
இந்நிலையில் குறித்த நபர் நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.
இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் செய்து உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்