முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 775 பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்

பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல்
பிரபாகரன் உட்பட நான்கு தலைவர்கள் நாட்டில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். சிங்கள தொலைகாட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே டலஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னர் நான்கு பிரபுக்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களே நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர். சேனாநாயக்க குடும்பம், ஜெயவர்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் மற்றும் ராஜபக்ஷ குடும்பம் என நான்கு அரசியல் பிரபுக்களின் குடும்பங்களே நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தன. இடையில் சில ஆண்டுகள் ரணசிங்க பிரேமதாச, டி.வி.விஜேதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய பிரபுத்துவ அரசியலில் இருந்து வராத கீழ் மட்டத்தை சேர்ந்தவர்கள் நாட்டை ஆட்சி செய்தனர். பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered இந்த அரசியல் பிரபுக்களின் ஆட்சிக்கு எதிராக பிரபுக்கள் அற்றவர்களின் அரசியலுக்காகவே சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. பிரபுக்களின் அரசியலுக்கு எதிராக சிலர் கிளர்ந்து எழுந்தனர். நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது என்ன நடந்தது, வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பிரபுக்கள் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்துகொண்டனர். பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered ஜெயவர்தன, ராஜபக்ச குடும்பங்கள் டலஸ் அழகபெருமவுக்கு எதிராக ஒரு முகாமில் இணைத்தனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியாது. நான் போட்டியிட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நான் குறிப்பிட்டது போல் வரலாற்றில் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். பிரபுக்கள் அற்ற அரசியல் முன்னெடுப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளில் நான்கு பிரதான பாத்திரங்களை நாம் பார்த்திருக்கின்றோம். விஜயகுமாரதுங்க, ரோஹன விஜேவீர, ரணசிங்க பிரேமதாச, வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர்களின் அரசியலை நான் நியாயப்படுத்தவில்லை. எனினும் அவர்கள் பிரபுக்கள் அற்ற அரசியலுக்காக குரல் கொடுத்தனர். பிரபாகரன் கொலை செய்யப்பட்டதற்கு இதுவே காரணம்! டலஸ் பகீர் தகவல் | This Is The Reason Why Prabhakaran Was Murdered பிரபுக்கள் அற்ற அரசியலுக்காக குரல் கொடுத்த இந்த நான்கு பேரும் இறுதியில் வீதியில் கொலை செய்யப்பட்டனர். ஆனால், பிரபுக்கள் மக்களின் தோளின் மீது மிக கௌரவமாக மயாணத்தை நோக்கி சென்றனர். இதுதான் வரலாறு எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனது தொலைபேசி 24 மணிநேரமும் ஒட்டு கேட்கப்படுகிறது. இதற்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதை இனி வரும் காலங்களில் வெளிப்படுத்துவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி