முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 682 இஸ்லாமிய மதங்கள் விரிவடைவதன் பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவில் இந்து, இஸ்லாமிய மதங்கள் விரிவடைவதன் பின்னணி என்ன?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலியாவில் இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் மற்ற மதங்களை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருவது, அந்த நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது. மறுபுறம், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அது 44% ஆக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா அதிக நிலப்பரப்பை கொண்ட உலகின் ஆறாவது நாடாக இருக்கும்போதிலும் அங்கு மக்கள் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வெறும் இரண்டரை கோடி தான். ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 44 சதவீதத்தினர் கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர், இருப்பினும் அதற்கு நெருக்கமாக 39 சதவீத மக்கள் தாங்கள் 'மதமற்றவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் 'மதமற்றவர்களின்' எண்ணிக்கை கிட்டதட்ட 9% உயர்ந்துள்ளது.
அதே சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து மதங்களாக இந்து மதமும், இஸ்லாமிய மதமும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் இந்த இரண்டு மதங்களையும் தலா 3% மக்களே பின்தொடர்கின்றனர் என்பது கூடுதல் தகவல். தொடர்ந்து உயரும் குடிபெயர்வு தொடர்ந்து உயரும் குடிபெயர்வு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற மேற்குலக நாடுகளை போன்றல்லாமல் ஆஸ்திரேலியாவில் தாமதமாகவே எவ்வித வேறுபாடுமின்றி அயல்நாட்டினருக்கான கதவுகள் திறக்கப்பட்டன. குறிப்பாக, 2000ஆவது ஆண்டுக்கு பின்பு ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களின் குடியேற்றமும் ஆஸ்திரேலியாவில் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக அதன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது வெளிநாட்டில் பிறந்த பெற்றோரை (குறைந்தது ஒருவர்) கொண்டவர்களாகவோ உள்ளதாகவும் இப்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது? உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு? குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டரை கோடி பேர்களில் அந்த நாட்டில் பிறந்தோர் முதலிடமும், இங்கிலாந்தில் பிறந்தோர் இரண்டாமிடமும் வகிக்கும் நிலையில், சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு குடியேறிகளின் வருகையில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும், 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு புதிதாக குடியேறியுள்ளனர். அதில், கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். மேலும், ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடிகளின் மக்கள் தொகை 3.2 சதவீதமாக (8,12,728 பேர்) உள்ளது. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் 167 மொழிகளை பேசுவதாகவும் அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவின் மூலம் தெரியவந்துள்ளது. கனவாக மாறும் சொந்த வீடு கனவு கேரவன் பட மூலாதாரம்,GETTY IMAGES எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் சொந்த வீடு வாங்குவது என்பது அனைத்துத்தரப்பு மக்களின் முக்கியமான இலக்குகளில் ஒன்றாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அது எட்டாக்கனியாக மாறி வருகிறது. வீட்டு வசதியை பெறுவதற்கு ஏற்ற உலக நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்கள் மிகவும் பின்தங்கி இருப்பதாக இந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா பரவலுக்கு பிறகு மக்கள் மாற்று வழிகளை தேட துவங்கியுள்ளதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு சுற்றுப்பயணிகள் இடையே பிரபலமானதாக விளங்கும் கேரவன்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 150% அதிகரித்து 60,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படகு வீடுகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?