முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 568 விமானத்தில் சென்று அகதியாக பதிவு செய்ய முற்பட்டவருக்கு நேர்ந்த கத

விமானத்தில் சென்று அகதியாக பதிவு செய்ய முற்பட்டவருக்கு நேர்ந்த கதி
இலங்கையில் இருந்து விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையர் அகதியாக பதிவு செய்ய படகில் வந்ததாக கூறி நாடகம் இந்தியாவின் தனுஷ்கோடியில் இடம்பெற்றுள்ளது ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். முன்னுக்குப்பின் முரணான பதில் விமானத்தில் சென்று அகதியாக பதிவு செய்ய முற்பட்டவருக்கு நேர்ந்த கதி பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறி வந்ததோடு அவர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா? அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த தீடை பகுதியில் கடல் பகுதியில் கடல் நீரில் நனைந்த படியே தஞ்சம் அடைந்தால் அகதியாக வந்து இருக்கிறார் என்று காவல்துறையினர் அழைத்து சென்று மண்டபம் அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தோடு தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து மரைன், கியூ பிரான்ச் போலீசாரின், மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் அவர் விசா மூலம் இலங்கை கொழும்பில் இருந்து சென்னை வந்து பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவரை முழு விசாரணை நடத்தியதில் விசா மூலம் வந்தது உறுதியானதை அடுத்து அவருடைய விசாவின் கால அவகாசம் இன்னும் 90 நாட்கள் உள்ளது. இலங்கை காவல் துறையில் பணியாற்றிவர் விமானத்தில் சென்று அகதியாக பதிவு செய்ய முற்பட்டவருக்கு நேர்ந்த கதி இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறையினர் இலங்கையில் இருந்து விசா மூலம் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை பகுதியில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் விசா மூலம் தமிழகம் வந்த இலங்கையை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் அவர் முறையான ஆவணங்கள் வைத்துள்ளதை அடுத்து சந்தேகப்படும் படியாக வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?