முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 563 உணவு கொடுப்பவனை அடைத்து விட்டு பிள்ளையை வளக்க முடியுமாக?

மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி
மன்னார் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் தந்தையொருவர் 18 வயதிற்கு குறைந்த பிள்ளையொருவருக்கு உலோக கரண்டியை சூடாக்கி சுட்டதாக அதாவது சித்திரவதை செய்ததாக கூறி இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 308A இன் கீழ் குற்றப்பகர்வு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை தொடர்ந்து வாதாடா விரும்பாத தந்தை தான் குற்றவாளி என மன்றுரை செய்ததன் பின்னர் அவரின் மகளாகிய 14 வயது சிறுமியும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணை குறித்த தந்தை சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணி டினேஸன் அஜராகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிரியின் சொந்த மகள் எனவும் அந்த சிறுமி இன்றைய தினம் தனது தந்தையுடனேயே நீதிமன்றம் வந்துள்ளதாகவும், இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையென்றும் இவர் கடற்தொழில் செய்தே தனது குடும்பத்தை பராமரித்து வருவதாகவும் இவருக்கு சிறைதண்டணை விதிக்கபடும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த குடும்பம் அந்த சிறுமி உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள், என்றும் ஒத்திவைத்த சிறைதண்டனையோ அல்லது தண்ட பணத்தினால் தண்டிக்குமாறும் விண்ணப்பத்தினை பதிவு செய்திருந்தார். மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி வழக்குத்தொடுனர் சார்பாக தோன்றிய அரச சட்டத்தரணி அவர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு தண்டணையாக 2 வருடங்கள் குறையாத 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைதண்டனை மற்றும் தண்டபணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தண்டணைச்சட்டக்கோவையின் பிரிவு 308A(2) கூறுவதாகவும் ஆதலினால் கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒத்திவைத்த சிறை தண்டணை வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றத்தின் தீர்க்கப்பட்ட வழக்குகளை மேற்கொள்காட்டியும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதினை அரசியல் அமைப்பின் உறுப்புரிமை மற்றும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு சமவாயத்தினையும் எடுத்துக்காட்டி அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென விண்ணப்பம் செய்திருந்தார். இருபக்க விண்ணப்பத்தினையும் செவிமடுத்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அந்த சிறுமியினை அழைத்து இந்த சம்பவத்திற்கு பிறகு வேறு எது துன்புறுதல் ஏற்பட்டதா என வினாவினார் அந்த சிறுமி இல்லையென்றும் அப்பா எங்களை நல்லா பார்த்துக்கொள்கின்றார் என்று கூறியுள்ளார். அதன்பின்னர் உங்களை யார் பார்த்துக்கொள்கின்றார் என கேட்க மழலை மொழியில் அப்பா தொழில் போய் உழைக்கின்றார் என்றும் நானும் தம்பி தங்கைகள் இருக்கின்றார்கள் என்றும் அம்மா வீட்டில்தான் இருக்கின்றார் என்றும் சிறுமி கூறியுள்ளார். இரு பக்க வாத பிரதிவாதங்களை ஆராய்ந்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள், சட்டம் கட்டாயம் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஏற்பாட்டினை கொண்டிருந்தாலும் வழக்கின் தன்மை எதிரியின் குடும்ப நிலை என்பவற்றை கருத்தில் கொண்டு 2 வருட சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டும் 10000/- தண்ட பணமும் விதித்தார். சத்தமிட்டு அழுத சிறுமி மேல் நீதிமன்றத்தில் கதறி அழுத சிறுமி! விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை: வெளிவந்த பின்னணி தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக எதிரி சிறை கூண்டில் அடைக்கப்பட்டார். தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டதினை பார்த்த சிறுமி நீதிமன்றத்தில் சத்தமிட்டு அழுதுள்ளார். அந்த நிலையில் அங்கிருந்த பெண் காவல்துறையினர் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வழக்கும் அழைக்கப்பட்டது சிறுமியின் அழுகை நிற்கவில்லை கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அச்சிறுமியை அழைக்குமாறு கூறினார். ஏன் அழுகின்றீர்கள் என வினாவினார், சிறுமி அப்பா வேண்டும் என்று கூறியுள்ளார், நீதிபதி அவர்கள் அழ வேண்டாம் அப்பா வருவார் அப்பாக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லையென ஆறுதல் கூறினார். அதன் பின்னர் மன்றுக்கு கருத்து தெரிவித்த நீதிபதி அவர்கள் சட்டத்தில் கட்டாய சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கூறியிருக்கின்ற போதிலும் இவ்வாறான புற விடயங்களையும் அவதானிக்க வேண்டுமெனவும் சிறைத்தண்டனை விதிக்கபடும் பட்சத்தில் குடும்பம் மாத்திரமல்ல சிறுமியும் பாதிக்கப்படுமென கூறினார். குறித்த சம்பவம் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்திருந்தது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப