முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 562 வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம்

வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம் - அமெரிக்க அதிகாரி தகவல்
வடகொரியா எந்த நேரத்திலும் ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். வட கொரியா ஞாயிற்றுக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த சில நாட்களில் வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சுங் கிம் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அத்துடன், இதுபோன்ற எந்த அணு ஆயுத சோதனையும் "விரைவான, ஆவேசமான" பதிலடியால் எதிர்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் வெண்டி ஷெர்மன் செய்தியாளர்களிடம் கூறினார். வட கொரியா ஐந்து ஆண்டுகளாக அணு ஆயுத சோதனையை நடத்தவில்லை. இருப்பினும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜகார்த்தாவில் இருந்து பேசிய அமெரிக்க அதிகாரி கிம், வட கொரியா இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு 25 ஏவுகணைகளை பரிசோதித்ததே வட கொரியாவைப் பொறுத்தவரை அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த ஆண்டு ஜுன் மாதத்துக்குள்ளாகவே அந்நாடு 31 ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது என்று தெரிவித்தார். வடகொரியாவுக்கு எச்சரிக்கை: ஒன்றாக இணைந்து எட்டு ஏவுகணைகளை ஏவிய தென் கொரியா, அமெரிக்கா தந்திரோபாய ரீதியிலான சிறிய அளவுள்ள அணுக்கரு ஆயுதங்களைப் பயன்படுத்த அந்நாடு விருப்பம் கொண்டுள்ளது வட கொரிய அதிகாரிகள் பேச்சில் இருந்து தெரிகிறது என்றும் அவர் கூறினார். அடுத்த சுற்றுப் பரிசோதனைகள் எப்போது நடக்க வாய்ப்புள்ளது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எப்போது வேண்டுமானலும் நடக்கலாம் என்று தெரிவித்தார் அமெரிக்க அதிகாரியான கிம். அப்படி நடத்தப்படும் எந்த சோதனையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை முழுவதும் மீறுவதாகவே இருக்கும் என்று தென் கொரியத் தலைநகர் சோலில் செய்தியாளர்களிடம் கூறினார் ஷெர்மன். அங்கு அவர், தென் கொரிய, ஜப்பானிய அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மட்டுமல்ல, உலகமே கடுமையாக எதிர்வினையாற்றும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, வட கொரியா இதுவரை பதில் ஏதும் கூறவில்லை. வட கொரிய ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடி தரும் வகையில் திங்கள்கிழமை தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து 8 ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தின. இந்நிலையில், நிபந்தனை ஏதுமில்லாமல் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவும், தென் கொரியாவும் தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்தார். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வட கொரியாவில் நிலவும் கோவிட் தொற்று சூழ்நிலைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா தயார் என்றும் அவர் கூறினார். ஆனால், வட கொரியாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?