இஸ்லாமிய நாடுகளால் இந்தியாவிற்கு வந்த சிக்கல்! கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள இந்தியா-!
இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருவதாக இஸ்லாமிய நாடுகள் புகார் வைத்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகளின் இந்த புகார் காரணமாக இரண்டு தரப்பு உறவு பாதிப்படையும் அபாயம் உள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவரின் பேச்சு உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இவரின் பேச்சை கத்தார் கடுமையாக விமர்சனம் செய்தது. கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது.. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து இந்தியா சார்பிலும், அது அரசின் அதிகாரபூர்வ கருத்து கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கத்தார் மட்டுமின்றி இந்தியாவை ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்திய தரப்பில் இருந்து விளக்கம், நடவடிக்கை ஆகியவை தேவை என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த மோதல் காரணமாக இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் உறவு பாதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இந்தியா ஜிசிசி எனப்படும் Gulf Cooperation Council (GCC) உடன் மிக அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளுடன் இந்த வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகம் என்பது 87 பில்லியன் டாலர் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த வர்த்தகம் உயர்ந்து வருகிறது. அதோடு கத்தார் உள்ளிட்ட நாடுகளில் கேரளாவை சேர்ந்த 35 லட்சம் பேர் உட்பட பல லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இந்தியாவின் டாப் எண்ணெய் இறக்குமதி தேவையை பூர்த்தி செய்வது இந்த ஜிசிசி நாடுகள்தான். இதனால்தான் 2014ல் இருந்து பிரதமர் மோடி அடிக்கடி ஜிசிசி நாடுகளுக்கு சென்று சந்திப்பு நடத்தி வருகிறார். யுஏஇ உடன் இந்தியா free trade agreement செய்தது கூட இதற்குத்தான்.
அதோடு இரு தரப்பு உறவை பறைசாற்றும் விதமாக அபு தாபியில் 2018ல் கட்டப்பட்ட இந்து கோவிலின் திறப்பு விழாவிற்கு கூட சென்று வந்தார். அந்த அளவிற்கு இந்தியா – இஸ்லாமிய நாடுகள் இடையே உறவு உள்ளது. ஆனால் இப்போது ஏற்பட்ட இருக்கும் பிரச்சனை காரணமாக ஜிசிசி – இந்தியா இடையிலான உறவை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வெளியுறவுத்துறை இருக்கிறது. பல மில்லியன் டாலர் வர்த்தகம் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஜிதேந்தர் நாத் மிஸ்ரா பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இணைந்து இந்தியாவை தாக்க வேண்டும் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் தாங்கள் யார் என்பதை அவர்கள் நிருவிக்க வேண்டும் இதையே பெரும்பாண்மையான இஸ்லாமியர்கள் விரும்புகின்றார்கள்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்