முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 555 கொழும்பில் ஆயுதக் கும்பல் 6 பேர் பலி

நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் கொடூர சம்பவம்: அச்சத்தில் இலங்கை மக்கள்
நாட்டின் பொருளாதார நெருக்கடி, உணவுத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் சவால்களை எதிர்நோக்கும் இலங்கை மக்கள் மத்தியில் தற்போது புதிய அச்சங்களை தோற்றுவித்துள்ளது. கொழும்பில் இன்று மாலை (06-06-2022) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு -15 அளுத்மாவத்தை, ரெட்பானவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே 23 வயதான இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நாட்டில் கடந்த 05 நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்வங்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான கவலைகள் இலங்கையிலும் அதிகரித்துள்ளன. கடந்த மே மாதம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பஸ்டியன் மாவத்தையில் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கொழும்பிலுள்ள பொலிஸ் துணை தலைவரின் அலுவலகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. இதில் 30 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். இதேவேளை கடந்த 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அளுத்கம மொரகல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெருவளையை சேர்ந்த 42 வயதான ஒருவர் உயிரிழந்தார். அன்றைய தினமே பிற்பகல் வேளையில் பாணந்துறை பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியது. இதன்போது பாணந்துறை வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய மரக்கறி விற்பனையாளர் கொல்லப்பட்டார். அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் கடந்த சனிக்கிழமை 27 வயதுடைய இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் குற்றத்தில் சந்தேகிக்கப்படும் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் அறிவித்திருந்தது. 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தங்காலை – மொரகெடிய பகுதியில் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர். 04 ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரே இந்த கொலையை செய்திருந்ததாகவும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் அறிவித்தனர். இந்த பின்னணியில் இன்று மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும் இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில், அரச தரப்பு சாட்சியாளர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறை திணைக்களத்திலிருந்து சாட்சியாளர்கள் குறித்த விடயங்கள், கசியவிடப்படுகின்றவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் காவல்துறை திணைக்களம் மீது ஸ்ரீலங்கா காவல்துறை தலைமையகம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது அதிகரித்துவரும் ஆயுதப் பாவனை இலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப