முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 553 எஞ்சிய 2 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகே பதவி விலகுவேன்

இலங்கை சிக்கல்: எஞ்சிய 2 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகே பதவி விலகுவேன் - கோட்டாபய ராஜபக்ஷ
தனது எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பிறகே விலகப்போவதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ப்ளும்பெர்க் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலக போவதில்லை எனவும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஆணை அளித்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களையும் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகுமாறு மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விளம்பரம் எனினும், தான் இனி தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ''தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இலங்கை, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், எரிபொருள், எரிவாயு, மருந்து வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால், கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு இன்று 50 நாட்களை கடந்து அரச எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகம் மாத்திரமன்றி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் பணவீக்கம் சுமார் 40 வீதத்தை எட்டியுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற போராட்டம், கடந்த மே மாதம் 9ம் தேதி வன்முறையாக மாறியதுடன், அந்த வன்முறைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சுமார் 10 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 200ற்கும் அதிகமானோர் காயமடைந்ததுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்தன. இந்த வன்முறைகளை அடுத்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மே மாதம் 12ம் தேதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். கோட்டாபய பதவி விலகக் கோரி நடந்துவரும் போராட்டத்தின் ஒரு காட்சி. இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியாக கோரியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிக காலம் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ பதவிக் காலம் முடிவடையும் வரை அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர் ஒருவரை மேற்கோள்காட்டி ப்ளும்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக சென்றிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி கூறியுள்ளார். தான் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடி, கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மசகு எண்ணெயை நீண்ட கால உடன்படிக்கையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் தான் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மானிய அடிப்படையில் முன்னோக்கி செல்ல வேண்டும். அரச ஊழியர்களை அல்லது ராணுவத்தை குறைக்க முடியாது. ஆள்சேர்ப்பை குறைக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப