முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 543 வரி விகிதம் உயர்வால்கவலையடையும் மக்கள்

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருவாய் வரும்? மக்களுக்கு என்ன ஆகும்?
பிரதமர் அலுவலகம், கொழும்பு இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதன்படி, பெறுமதி சேர் வரியின் ஊடாக 2022-ஆம் ஆண்டு 91 பில்லியன் ரூபாய் திரட்ட உத்தேசிக்கப்பட்ட நிலையில், புதிய வரி அதிகரிப்பின் ஊடாக அந்தத் தொகை 156 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. அத்துடன், 11.25 வீதமாக காணப்பட்ட தொலைத்தொடர்பு வரியானது, 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் தொலைத்தொடர்பு வரியின் ஊடாக 2022-ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் தொகையானது புதிய வரி அதிகரிப்பால், அந்த வரி மூலமான உத்தேச வருவாய் எதிர்பார்ப்பு 5 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. பெறுமதி சேர் வரி மற்றும் தொலைத்தொடர்பு வரி ஆகியவற்றின் ஊடாக ஏற்கெனவே 94 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகை 161 பில்லியன் ரூபாயாக உயர்வடைந்துள்ளது. இலங்கை அரசியலில் ராஜபக்ஷே குடும்பம் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி? இலங்கை மக்களை பிரச்னைகளில் இருந்து மீட்பேன் - புதிய பிரதமர் ரணில் இலங்கை நெருக்கடி இன்னும் மோசமாகும்: ரணில் விக்ரமசிங்க பிபிசிக்கு பேட்டி அதேபோன்று, 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும் சில வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு 3 மில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட தனிநபர் வருமான வரி வரம்பு, எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 1.8 மில்லியன் ரூபாய் வரை குறைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபர் வருமான வரியின் ஊடாக 2022ம் ஆண்டு 5 பில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புதிய வரி நடைமுறையின் கீழ் அந்த தொகை 20 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் 1.8 மில்லியன் ரூபாய் வருடாந்த வருமானத்தைப் பெறும் தனிநபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் "வரி அதிகரிப்பு, இலங்கை மக்களை பட்டினி சாவுக்கு கொண்டு செல்லும்" என்கிறார் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் "பட்டினி சாவுக்குக் கொண்டு செல்லும்" உள்நாட்டு இறைவரிச் சட்டம், பெறுமதி சேர் வரி சட்டம், தொலைத்தொடர்பு வரி சட்டம், பந்தயம் மற்றும் விளையாட்டு வரி சட்டம், நிதி முகாமைத்துவ சட்டம், தனிநபர் வருமான வரி சட்டம், பன்னாட்டு வருமான வரி அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் பல வரி சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. இந்த வரி திருத்தங்கள் பொதுமக்கள் வாழ்க்கையில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும் என்பது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் கருத்து வெளியிட்டார். ''நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல், பண வீக்கம், வாழ்க்கை செலவோடு ஒப்பிடும்போது, இந்த வரி அதிகரிப்பானது, மக்களுக்கு மேலதிக சுமையாகவே இருக்கும் என்று நான் பார்க்கின்றேன். வாழ்க்கை செலவு 300 மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை 300 மடங்கு அதிகரித்திருக்கின்றது. பொருட்களுக்குத் தட்டுப்பாடு, மாதாந்தம் சம்பளம் எடுக்கின்றவர்களுக்கு அவர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. அன்றாட தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இல்லை.'' ''பெரும்பாலான வணிக நிறுவனங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மூடியுள்ளனர். லாபத்தை எட்டுவதை விட, செலவை கூடு ஈடு செய்ய முடியாத நிலைமையில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிலைமையில் அரசாங்கம் வரியை கூட்டியிருப்பதற்கான ஒரேயொரு காரணம் என்னவென்றால், அரசாங்கத்தின் வருமானத்தை ஈடு செய்து கொள்வதற்காக வரும் மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குக் கூட பணம் இல்லை என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார். ஆகவே நிதிப் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்ளவே அரசாங்கம் இதைச் செய்திருக்கிறது," என பேராசிரியர் கூறினார். “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” – தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் போராட்டங்களால் பலவீனமாகிறதா இலங்கை சுற்றுலாத் துறை? கள நிலவரம் என்ன? "சிங்கள, முஸ்லிம் மக்களை இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்" - இலங்கையில் ஒரு போராட்டக் குரல் ''சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரி அதிகரிப்பானது, இலங்கை மக்களை பட்டினி சாவுக்குக் கொண்டு செல்லும்'' என அவர் கூறுகிறார். ''பொருட்களின் விலைகள் மீண்டும் 60 - 70 சதவிகிதம் அதிகரிக்கும். வரி விதிப்பை வர்த்தகர்கள், பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் மீதே சுமத்துவார்களே தவிர, அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். அரிசி விலை கிட்டத்தட்ட 400 ரூபாய்க்கு போகக்கூடிய நிலைமை ஏற்படும். இந்த வரி அதிகரிப்புக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையே பிரதான காரணம். சர்வதேச நாணய நிதியம் கொடுத்த 3 நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மக்கள் மீது இந்தச் சுமையை சுமத்துகின்றது. வரி அதிகரிப்பு மாத்திரம் அல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொண்டால், அந்த கடனைச் செலுத்தும் சுமையும் மக்கள் மீதே சுமத்தப்படும். ஆகவே இலங்கை தொடர்ந்தும் கடன் நச்சு வட்டத்திற்குள் சுழல்வதற்கும் வருமான பற்றாக்குறை நச்சு வட்டத்திற்குள் சுழல்வதற்கும் இது காரணமாக இருக்கும். மேன்மேலும் மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக, மக்களை பட்டினி சாவு நிலைமைக்குக் கொண்டு செல்ல இது வழி வகுக்கும்," என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் குறிப்பிடுகின்றார். வரிவீதத்தை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டபோது பிரதமர் அலுவலகம் என்ன சொன்னது?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப