முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 538 வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு

வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு- அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை தமிழருக்கு விதிக்கப்பட்ட அபராதம் மலேசியாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு பாரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புலேந்திரன் பழனியப்பன் (51) என்ற இந்திய வம்சாவளி தமிழர் அனுமதியின்றி பாம்புகளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 3,600 டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட மலைப்பாம்புகள் மலேசியாவில் வசிக்கும் பாரவூர்தி ஓட்டுனரான பழனியப்பன் என்பவருக்கு சிங்கப்பூருக்கு பாம்புகளை கடத்தியிருக்கிறார். மலைப்பாம்புகள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகளும் பரிசீலக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு- அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை உலகின் மிக நீளமான பாம்பான இராச மலைப்பாம்புகள் (reticulated pythons) தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டவை. பல நாடுகளில், அதன் தோலுக்காகவும், பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தவும், செல்லப்பிராணிகளாக விற்பனை செய்யவும் கொல்லப்படுகின்றன. பழனியப்பன் ஓட்டிச் சென்ற மலேசியப் பதிவு செய்யப்பட்ட கொண்டெய்னர் லொறியை சோதனை செய்த குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் ஏப்ரல் 7ஆம் திகதி பாம்புகளை கைப்பற்றினர். இரண்டு மலைப்பாம்புகளும் கடுமையான, நாள்பட்ட மற்றும் மீளமுடியாத சுகாதார நிலைமைகளைக் கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ந்தனர், இதனையடுத்து வேறுவழியின்றி அவை கருணைக்கொலை செய்யப்பட்டன. வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு- அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை ஓட்டுனர் இருக்கைக்கு மேலே உள்ள மேல்நிலைப் பெட்டியில் துணி மூடைகளில் பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், சிங்கப்பூரில் உள்ள அறியப்படாத பெறுநருக்கு பாம்புகளை கொடுத்து உதவ பழனியப்பன் ஒப்புக்கொண்டது தெரியவந்தது. அந்த வேலைக்காக அவருக்கு மலேசிய ரிங்கிட் 300 (தோராயமாக 68 அமெரிக்க டொலர்கள்) கொடுக்கப்பட இருந்தது.
பழனியப்பனுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது கடத்தப்பட்ட ஒவ்வொரு பாம்பிற்கும் சிங்கப்பூர் பண மதிப்பில் $50,000 வரை அபராதம் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப