ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் மகிந்த வெளியிட்டுள்ள பகிரங்க அழைப்பு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள்இ நாட்டில் காணப்படும் இந்த பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது இரகசியமல்ல.
எதிர்பாராத விதமாக முகங்கொடுக்க நேரிட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் நிதானத்துடனும் செயல்பட்டு நீங்கள் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றீர்கள்.
தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான் பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.
எனினும் பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இதுவரை முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதுடன்இ தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதற்கான ஆதரவை பெற்று வருகிறது.
இந்த அனைத்து முயற்சிகளினதும் இறுதி நோக்கம் ஒரு சிறந்த நாட்டை நிர்மாணிப்பதாகும். அதற்காக உழைக்கும் மக்களின் மகத்தான அர்ப்பணிப்பை சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்