முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAML Eelam news 240

   தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!!


 



சிங்கள அரச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழர்களோடு முஸ்லீம்கள் இணைந்திருப்பது மட்டுமல்ல, முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பானது என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப்பிரதிநிதி அப்துல்லா தெரிவித்துள்ளார்.


தமிழர் தாயகத்தில் எழுச்சி கொண்டுள்ள 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' எனும் அறவழிப்போராட்டதுக்கு, புலம்பெயர் தமிழர்களின் உறுதுணையினை வெளிப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த தோழமைக் கூட்டத்தில் கருத்துரைக்கும் போதே இதனை அவர் தெரிவித்திருந்தார்.


சிங்கள பேரினவாதிகளாலும், கடும்போக்குவாதிகளாலும் தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அப்துல்லா, சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்புக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் தமிழர்களோடு இணைந்து போராடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இணைந்த செயற்பாடு சக்திவாய்ந்தது மட்டுமல்லாது பலமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த  தமிழினவழிப்பு நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராகவும் தமது கண்டனத்தினை தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்த அப்துல்லா, 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' பேரணி யாழ் மண்ணில் கால் வைக்கும் போது தமது சமூகம் அதற்கு ஆதரவாக பங்கெடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


மேலும் இடம்பெயர்ந்த முஸ்லீம்களது மீளகுடியேற்றம் என்பது தமிழ்மக்களது அங்கீகாரத்துடனேயே சாத்தியம் என்பதனை வலியுறுத்திய அப்துல்லா, வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களது அரசியல், இணைந்த வாழ்வு ஆகியதான சிங்கள அடக்குமுறையாளர்களிடம் இருந்து முஸ்லீம்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எனவும் அவர் இடித்துரைந்திருந்தார்.


முன்னராக யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம், 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை'யிலான அறவழிப்போராட்டத்துக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததோடு, முஸ்லீம்களை 'தமிழர்களாக' அணிதிரளுமாறு அழைப்பும் விடுத்திருந்தது.


இதேவேளை, அப்துல்லாவின் தோழமையினை கூட்டத்தில் பங்கெடுத்திருந்த பலரும் வரவேற்றிருந்ததோடு, இரு சமூகங்களுக்கு இடையிலான இணைந்த செயற்பாட்டுக்கு நல்லதொரு தொடக்கமாக தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளதென குறிப்பிட்டிருந்தனர்.


சமதான காலத்தில் விடுதலைப்புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மானுடத்துக்கான ஒன்றுகூடல் நிகழ்வானது, மானிடத்தின் குரலாக தமிழர்களது உரிமைகளுக்கான ஒலித்திருந்தனை நினைவூட்டிய நீதிக்கான கனேடிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு பிரதிநிதி திருமுருகவேந்தன், தியாகி திலீபன் காலத்தில் யாழ் பொம்வெளி, புதிய சோனகதெரு, ஒஸ்மேனியே கல்லூரி உட்பட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களையும் ஞாபகப்படுத்தினார்.


1957ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழரசுகட்சியினால் மேற்கொள்ளப்பட்ட கதவடைப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முஸ்லீம்கள் துணைபுரிந்த சம்பவத்தினை குறித்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கலா தன்னாட்சி அதிகார சபை வரைவில், முஸ்லீம் மக்களது தனித்துவம் அதில் அங்கீகரிக்கப்பட்டு, சிறிலங்காவின் யாப்பினையும் விட, அதிகளவான உரிமைகள், அதிகாரங்கள் அந்த வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்ததனையும் குறித்துரைந்தார்.


இவ்வாறு யாழ் முஸ்லீம் இளைஞர் கழகப் பிரதிநிதி அப்துல்லா அவர்களது தோழமையினை பலரும் உற்சாகத்தோடு வரவேற்றிருந்ததோடு, தாயக மக்களது எழுச்சிப் போராட்டத்துக்கான தமது உறுதுணையினை வெளிப்படுத்தியிருந்தனர்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?