முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 290

 தென்தமிழீழத்தின் கதை கண்ணீரிலும் இரத்தத்திலும் எழுதப்படுகிறது (உண்மைச் சம்பவம்)





தென்தமிழீழத்தின் கதை கண்ணீரிலும் இரத்தத்திலும் எழுதப்படுகிறது (உண்மைச் சம்பவம்)


என்ர மகள்…… என்ர மகள்…… உன்ன இந்த நிலையில பாப்பம் எண்டு நான் நினைக்கயில்லையே….. உன்ன மணக்கோலத்தில பாப்பன் எண்டெல்லோ நான் கனவு கண்டன். கலையில நீ எப்படிச் சிரிச்சுக் கொண்டு போனாய். இப்ப இப்படிக் கிடக்கிறியே……………….. என்ர மகள் என்ர……… மகள்…………… என்ர சுமதி…………….


என்ற அழுகுரல் அந்த வீட்டிலிருந்து இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. பட்டுப்புடவை கட்டி, நெற்றித் திலகம் சிரிக்க, முகத்தில் மெல்லிய வேதனை கோடிட மலர் மாலைகளுக்குள் புன்னகையோடு, அமைதியாக நிரந்தரமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் சுமதி. தலைமாட்டிற் சாம்பிராணி புகைந்து கொண்டிருக்க இரண்டு குத்துவிளக்குகள் மின்னி மின்னி ஒளிவீசிக்கொண்டிருந்தன. சூழ இருந்தவர்களின் முகங்களில் கலவரமும் பீதியும் குடி கொண்டிருந்ததை அந்த மங்கிய ஒளியிலும் காணக்கூடியதாக இருந்தது. எந்தneramum எதுவும் நடக்கலாம் என்ற பயம். இந்த இரவு எப்படிக் கழியுமோ என்ற ஏக்கம். எங்கும் ஒரே அமைதி. அம்மாவின் மெல்லிய அழுகுரலைத் தவிர, எந்தச் சத்தமும் இல்லை. காலையில் கலகலப்பாக இருந்த வீடு, இப்போது மயான அமைதியில் மூழ்கிக் கிடந்தது.


கும்புறுமுனை.


மீனவக் குடும்பங்களைக் கொண்ட ஒரு அழகிய தென் தமிழீழக் கிராமம். அயற் கிராமங்களில் இராணுவத்தினர் புகுந்து நடத்தும் வெறியாட்டங்கள் போல் இங்கு நடக்காவிட்டாலும், இராணுவத்தின் எறிகணை வீச்சிலிருந்து இந்தக் கிராமமும் தப்பவில்லை. ஆழ் கடற் தொழில் தடைப்பட்டதால் இக்கிராம மக்கள் வேறு வேறு தொழில்களைச் செய்து தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். சுமதியின் தந்தை இப்போது கட்டிட வேலை செய்யும் கூலியில் அந்தக் குடும்பம் ஓடிகொண்டிருக்கிறது.


என்றும் போல் அன்றும் அமைதியாக விடிந்தது. தாய்க்குக் காலைச் சமையலுக்கு உதவி செய்துகொடுத்துவிட்டு, அவசர அவசரமாகத் தன்னை அலங்கரிக்கத் தொடங்கினாள். அவளின் நீண்டநாள் கனவு நாளை நானாகப் போகிறது. பெற்றோரை, சகோதரர்களை, தன் சொந்த மண்ணைப் பிரிந்து போவது கவலைதான் என்றாலும், இந்த நாசமாப் போவாங்களுக்கு இடையிலிருந்து ஆக்கினைப்படுவதைக் காட்டிலும் தன் மனதிற்குப் பிடித்தவனுடன் நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்தோடு துரிதகதியில் ஆயத்தமானாள். தனது ஒன்றுவிட்ட சகோதரியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.


“முதலில் வாழைச்சேனைக்குப் போய் தோழிகளுடன் படம்பிடித்துவிட்டு, அவர்களுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்து, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, நேரத்தோடு திரும்பினால் தான் ஊரிலுள்ள உறவினர்களுக்கும் போய் பயணம் சொல்லி முடிக்கலாம்.”


மனதில் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு, அக்காவும் தங்கையுமாக பேருந்து தரிப்பு நிலையத்திற்குச் சென்றனர். சுமதியின் வீட்டிலிருந்து அரைமைல் தொலைவில் கும்புறுமுனை இராணுவ முகாம். முகாமுக்கு முன் நின்றுதான் வாழைச்சேனைக்குப் பேரூந்து ஏற வேண்டும். பேருந்துக்காக வரும் யாருமே இராணுவத்தினரின் ஓநாய்ப் பார்வையிலிருந்து தப்ப முடியாது, குறிப்பாகப் பெண்கள், அதிலும் அழகான பெண்கள் என்றால் சொல்லத் தேவையில்லை. ஒரு பெண்ணில் குறிவைத்தார்கள் என்றால், அவளிடம் தமது காமவெறியைத் தீர்க்காது விடமாட்டார்கள்.


இப்படித்தான் நீண்ட நாட்களாகவே ஒருவனுக்குச் சுமதியின் மீது கண். அவளை அடைந்து தனது வெறியைத் தீர்க்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு. அந்தச் சர்ந்தப்பம் இன்று அவனுக்குக் கிடைத்தது. அசடு வழிந்தபடி அவன் சுமதியிடம் கடிதமொன்றை நீட்டினான். தனது கைக்கு வந்த கடிதத்தை படித்த சுமதி, சீற்றம் கொண்ட புளியானாள். கோபம் தலைக்கேறி, முகம் சிவக்க, “தூ……. நாயே………….. ” என்று காறி உமிழ்ந்தவள் கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டு வந்து பேருந்திலேயே ஏறி வாழைச்சேனைக்குச் சென்றுவிட்டாள்.


ஒரு சில நிமிட நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. இனி என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?


“கட்டாயம் என்னில் அவனுக்குச் சரியான கோவமாக இருக்கும். திரும்பிப் போக என்ன செய்யிறானோ தெரியாது. என்ற அவசரப் புத்தியாலதான் எல்லாம் வந்தது. பேசாமக் கடிதத்தை வாங்கிப்போட்டு இங்கால வந்து கிழிச்சுப் போட்டிருக்கலாம். இனி என்ன செய்யிறது? நடந்தது நடந்துபோச்சு.”


பயத்தோடும் மனக்கொந்தளிப்போடும் தோழிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு கும்புறுமுனைக்குப் பேரூந்து ஏறினாள். தரிப்பில் அவள் எண்ணியபடியே விளைவுகள் காத்திருந்தன.


சுமதியின் செய்கையால் ஆத்திரமும், அவமானமும் கொண்ட இராணுவத்தினன், வால்பிடிகளோடு அவளின் வரவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த நீண்ட வயர்த்துண்டு சுமதியைப் பதம்பார்த்தது. அவளின் வெண்ணிறத்தோல் சிவப்பாகி……….. வரிவரியாகி…….. உடம்பெங்கும் காயங்கள். சுருண்டு விழுந்த சுமதி சமாளித்துக்கொண்டு எழும்பி வீட்டை நோக்கி நடந்தாள். இதைவிடப் பெரிய விபரீதம் ஒன்று நடக்கப்போகிறது என்பதை இவள் அறியவில்லை.


சுமதி வீட்டை அண்மித்துவிட்டாள். குண்டுகளைக் கக்கியவாறு இராணுவ ஜீப் ஒன்று வந்துகொண்டிருந்தது. எல்லோரும் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டனர். சுமதி தாயுடன் சகோதரர்களுடன், தாத்தாவுடனும் வீட்டின் ஒரு மூலைக்குள் பதுங்கிக் கொண்டாள். வந்த ஜீப் வீட்டு வாசலில் குலுங்கி நின்றது. கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. சுவர் மூலையில் மார்புக்குக் குறுக்கே கைகோர்த்தபடி பதுங்கியிருந்த சுமதியை நோக்கி அந்த இராணுவத்தினனின் துப்பாக்கி வெடித்தது.


முப்பத்தாறு ரவைகள் சுமதியின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு சென்றன. அவனின் பெருவிரல் ஒன்று, ரவை ஏற்படுத்திய துவாரத்தினுள் புதைந்து, கழுத்தில் கிடந்த சங்கிலியின் தொங்கட்டானிற் குத்திட்டபடி, தாயின் மடியிற் சரிந்தாள் சுமதி.


குத்துவிளக்கின் மங்கிய ஒளியுடன் சேர்ந்தாற்போல் ஒரு குரல்:


என்ர மகள்…………..

என்ர மகள்…………..

என்ர சுமதி…………..


தென் தமிழீழத் தாய்மாரின் ஒருமித்த குரலாய் அது எழுந்து………… தேய்ந்தது………….


வலிகளுடன்:- உலகமங்கை.

களத்தில் (26.06.1996) இதழிலிருந்து.


“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?