முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 268

 மியான்மர் மக்களுக்கு அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்கிறது அமெரிக்கா- ராணுவம் கடுப்பில்





மியான்மர் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று அந்நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் கூறும்போது, ”நாங்கள் மியான்மர் மீது கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம். மியான்மர் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவிலிருந்து பின் வாங்க மாட்டோம். மியான்மர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள். ஜனநாயக அரசை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்றார்.


மேலும் மியான்மர் ராணுவத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேர் மீது திங்கட்கிழமை அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்தது.மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. போரட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.மியான்மர் ராணுவத்தின் இத்தாக்குதலை ஐ. நா.,பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.


என்ன நடக்கிறது மியன்மரில்?


மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.


இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.


மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?