முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news141

 கப்டன் சுந்தரி என்ற சுதந்திரப் பறவை..!

அலைபாடும் வல்வை மண்ணில் நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் தரிசனத்தின் பின்பு வளைந்து வரும் பாதையில் அரசமரத்தின் முன்னால் பச்சை நிறத்திலான தலைவாசலுடன்கூடிய பெரிய வீட்டில்

கலகலத்த சிரிப்பொலியும் சின்னச் சின்ன சண்டைகளும் பரபரப்புமாய் உருத்திராபதியின் குடும்பம் குதூகலித்துக் கொண்டாடிய காலமது.


குடும்பத்தில் ஆறாவது பெண்பிள்ளை உதயா என்று செல்லமாக அழைக்கப்பட்ட உதயலஷ்மி…. (கப்டன் சுந்தரி) உதட்டோரம் எப்பொழுதும் ஓர் புன்னகை… ஆழ்ந்த அர்த்தமான பேச்சுகள்… எதிலும் தீவிரமான ஆராட்சி…. அன்பும், அரவணைப்பும் அடஙகலான உபசரிப்பு…. இப்படி அவரது நற்பண்புகள் ஏராளம்.

இரட்டை ஐடை தோளோரம் சாய்ந்தாட அவளது அழகிய தோற்றம் எல்லோரையும் கவர்ந்திழுக்க… அவளது காதலோ தேசத்தின்பால் சாயத்தொடங்கியிருந்தது.


ஏற்கனவே, அந்த அன்பான அழகிய குடும்பத்தில் இரண்டு மூத்த சகோதரர்கள் தாய்மண்ணுக்காய் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதி அது. ஆங்காங்கே சண்டைகள் செல்லடிகளென காயப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க முதலுதவியின் அவசியத்தை உணர்ந்த உதயா, தன்னை சென்ஜோன்ஸ் முதலுதவிப்பிரிவில் இணைத்துக் கொண்டு பயிற்சியினை மேற்கொண்டதோடு மட்டுமல்லாது முதலுதவிப்பிரிவில் ஒர் அங்கமாக இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

முதலுதவிச் சீருடையில் சைக்கிளில் அவர் பணிக்கு செல்லும் காட்சி இன்றும் கண்முன்னே அழகாக நிழலாடுகின்றது. அந்தக் கம்பீரத்தின் அழகு அவருக்கு மட்டுமே உரியது.

யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக இலங்கை விமானப்படையின் தாக்குதல் வல்வெட்டித்துறையில்….. முதன்முதல் அந்த பயங்கரத்தில் அதிர்ந்து போயிருந்தது ஊர்… ஆனால் உதயாக்கா நிலைகுலையாமல்…. “தாக்குதலில் மக்கள் காயப்பட்டிருந்தால்…” என்பதை சிந்தித்து விமானத்தாககுதல் இடம்பெற்ற வல்வெட்டி மீசைக்கார ஜயா வீட்டை நோக்கி விரைந்தார்.


வழியெல்லாம் மக்கள் எதிர்வலம் செல்ல இவர் சம்பவ இடத்திற்குச் சென்று காயப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கினார்.

அந்தக் காலகட்டத்தில் பலாலி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரும், கடலிலிருந்து கடற்படையினரும் வல்வெடடித்துறை சுற்றுச்சூழல் எங்கும் பரவி குண்டு மழை பொழிந்தவண்ணம் இருந்த பதற்றமான பரபரப்பான சூழ்நிலையில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்த பலரில் உதயாக்காவின் பங்கு அளப்பரியது.


தாயகத்தின் மீது கொண்ட தீராத பற்றும் அரசியல் சமூக அக்கறையும் மட்டுமல்லாது பெண்விடுதலை மீதும் தனியார்வம் கொண்டிருந்தார். 1985ஆம் ஆண்டு சுதந்திரப்பறவைகள் அமைப்பில் இணைந்து பல வேலைத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

களத்திலும், கானகத்திலும் தாயக விடுதலப்பாதையில் பயணித்த போராளிகளுக்கான உலர் உணவுகள் தயாரித்தல் போன்ற வேலைத்திட்டங்களில் ஈடுபட்டார். அந்த நேரங்களில் பெண்கள் வீதியில் இறங்கி இவ்வாறான சேவைகளில் ஈடுபட்டதால் ஊரவரின் பல விமர்சனங்களுக்கு ஆளானாபோதும் மனம் சோர்ந்துவிடவில்லை.(போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் கல்வி, வீடு, திருமணம் என்னும் வட்டத்தை விட்டு களத்தில் இறங்கிய பெண்கள் பற்பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

லெப்டினன்ட் கேணல் திலீபன் அண்ணா அவர்கள் உருவாக்கிய “சுதந்திரப்பறவைகள்” சஞ்சிகை வெளிவருவதற்கும் முதன்மை காரணியாக விளங்கினார்.

இயற்கையிலேயே ஓவியம் வரைதல், கவிதை புனைதல் போன்ற திறமை கொண்டதால் சுதந்திரப்பறவை பத்திரிகையிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார். அவரது எழுத்துக்களிலும் பேச்சிலும் பெண்விடுதலை சார்ந்த கருத்துக்கள் உயிரோட்டமாய் இருக்கும்.



“சுதந்திரப்பறவைகள்” சஞ்சிகை வெளிவந்தால் அதனை வீடுவீடாக சென்று விற்பனை செய்ய வேண்டும். ஒருநாள் முன்மதிய நேரத்தில் சஞ்சிகை விற்பனைக்காய் உடுப்பிட்டி நோக்கி உதயாக்காவின் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து சென்றோம்.

ஒன்று…. இரண்டு… பத்து வீடுகள் ஏறியிறங்கி இருப்போம். ஒரு சஞ்சிகை கூட விற்பனை இல்லை. பல வீடுகளில் ஏச்சும் திட்டும் விழுந்தன… என் மனமோ சோர்ந்து விட்டது. நானோ… “உதயாக்கா காணும் வாங்கோ போவம்” என்றேன்.

எப்போதும் போன்று புன்சிரிபபுடன் “போராட்டத்தின் அவசியத்தையும் பெண்போராளிகளின் பலத்தையும் கட்டாயம் இதே மக்கள் உணர்வார்கள்.. என்ன இப்ப நாங்க கொஞ்சம் கஷ்டபடத்தான் வேணும்….. பொறு இதைவிட விருந்தும் மருந்தும் வீட்டுக்கு போகக் கிடைக்கும்…” என்று சிரித்தபடி சொன்னார். அவர் சொன்ன வார்த்தையின் எதிரொலி பல பெண் போராளிகளின் சரித்திரங்கள் இன்று. ஆரம்ப காலங்களில் சுதந்திரப்பறவைகள் அமைப்பில் இருந்த பெண்கள் எதிர்கொண்ட சமூகப்பிரச்சனைகள் மிகவும் பாரதூரமானவை. ஆனால் பின்னாளில் வீட்டுக்கு வீடு பெண்கள் விடுதலைப்போராளிகளாய் உருவாகியிருந்தனர்.

முன்னொரு காலத்தில் பெண்கள் மயானத்திற்கு (சுடுகாடு) செல்வது எமது சமூகத்தில் வழக்கில் இல்லை.

இருந்தபோதும், 1986 ஆம் ஆண்டு ஒரு சமரின் போது வீரமரணத்தை தழுவிய லெப்டினட் முரளியின் வித்துடல் வீதிவழியே வந்து வல்வை ஊறனி மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.


மண்ணுக்காய் உயிர்நீத்த வீரனிற்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென எண்ணி, வல்வை ஊறனி மயானம் வரை சென்றிருந்தார் உதயாக்கா.

மயானம் போன சம்பவம் மிகவும் பாரதூரமூன விடயமாக தமிழ் சமூகத்தால் பார்க்கப்பட்டு பற்பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

ஆனால், எங்கள் உதயாக்காவின் வித்துடல் விதைக்கப்பட்ட போது வல்வை மண்ணில் அனைத்துப் பெண்களும் அவருக்கு இறுதிமரியாதை செலுத்த மயானம் வரை சென்றிருந்தனர். ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திட்ட இரும்பு பெண்மணி இவர்.

1986 ஆம் ஆண்டு காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கிராமங்கள் தோறும் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்தப்பட்டது அந்த கூட்டங்களில் தெளிவான அரசியல் விளக்கங்கள்… போராட்டத்தின் மிக அவசியம் என்ற விடயங்களை உதயாக்காவின் பேச்சில் பொறிபறக்கும். இவர் சிறந்த ஒரு மேடைப்பேச்சாளரும் கூட.

1987 பெப்ரவரி மாதம்14 திகதி உதயாக்காவின் பெற்றோர் வீட்டில் இடியொன்று விழுந்தது. ஆம், உதயாக்கா மிகவும் நேசித்த தனது கூடப்பிறந்த மூத்த அண்ணன் சுதாண்ணா (ஐடியா வாசு என்று அழைக்கப்படும் கப்டன் வாசு) கைதடி வெடிவிபத்தில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார்.


இதுவரையும் வீட்டில் இரண்டு போராளிகள் இருந்தமையால் உதயா வீட்டிலிருக்கட்டும் என்ற பெற்றோரின் கண்ணீருடன் கூடிய கட்டளைக்கு கட்டுப்பட்டு இருந்தவர். 1987 சித்திரையில் தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டு சுந்தரி எனும் நாமாத்துடன் வலம் வந்தார்.

இராணுவப்பயிறசி பெற்று இருந்தும் அவரது அரசியல் நுண்ணறிவு பேச்சுவன்மை, சிறந்த ஆளுமை காரணமாக அரசியலில் மிகவு‌ம் திறம்படப் பணியாற்றினார்.

சக போராளிகளுக்கும் சிறந்த தாயாக, சகோதரியாக, தோழியாக வாழ்ந்து அனைவரது மனங்களிலும் இடம்படித்தார்.

1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் படையணியின் அரசியல் பூர்வமாக பெண்கள் சார்ந்த முதல் மாநாடு மகளீர் அணித்தலைவி ஜெயாக்கா தலைமையில் யாழ் வின்சன் திரையரங்கில் நடைபெற்றது.


மாநாட்டின் முழுமையான ஏற்பாட்டாளர் கப்டன் சுந்தரி. அந்த மாநாட்டில் தலைவர் தவிர்ந்த அனைத்து தளபதிகளும் கலந்து கொள்ள மேடையில் மகளீர் அணி குழுமியிருக்க… மேடையின் கீழே ஏனைய தளபதிகள் அமர்ந்திருந்தது ஓர் சிறப்பு அம்சமாகும். எமது தலைவர் பெண்விடுதலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

1990 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சுந்தரி அக்காவின் இன்னுமோர் சகோதரரான மேஜர் ஜேம்ஸ் விமானக் குண்டுத் தாக்குதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார். அதுவரை காலமும் அரசியலில் இருந்த சுந்தரி தானும் களத்தில் போராட எண்ணினார் தலைவரிடம் அனுமதி பெற்று அணித்தலைவியாக களத்தில் இறங்கினார்.

பலாலி முகாமிலிருந்து அடிக்கடி வெளியேறும் சிங்கள இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய போராளிகளில் இவரும் ஒருவர்.


பலாலி கட்டுவன் பகுதி காப்பரண்… அதிகாலை நேரம்…. சிங்கள இராணுவம் முன்னேறத் தொடங்கியது சுந்தரி தனது படையுடன் எதிர்க்க தொடங்கினார். பல நாட்கள் இவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் தோல்வியிலிருந்த சிங்ள இராணுவமு திட்மிட்டு பலம் வாய்ந்த அணிகளை இறக்கியது; போராட்டம் வேகம் பிடித்தது.


ஓர் கட்டத்தில் இராணுவச்சுற்றி வளைப்பில் மாட்டி கொண்ட சுந்தரியும் சில போராளிகளும் எதிரியின் கையில் வீழ கூடாதென எண்ணி சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்டனர்.

ஆம், 19.12 1990 ஆண்டு வீரமரணத்தை தழுவிக்கொண்ட கப்டன் சுந்தரி தமிழீழ வரலாற்றில் தனக்கென தனியொரு இடம் பதித்தவர்.

இவரது குடும்பம் போராட்டத்திற்கு மூன்று மாவீர முத்துக்களை வாரிக் கொடுத்து என்றும் அவர்கள் நினைவில் ஏங்கி நிற்கின்றது சரித்திர வீரத்துடன்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?